உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்

பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: ''நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாக்குகள் சென்றுவிடும் என்று பாஜ பி டீம், கைக்கூலி என்று என்னைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புக்கின்றனர்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=93ipfphu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தூத்துக்குடியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: கரூர் சம்பவத்தை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தேவைக்காக பேசுகிறது. போன உயிர் போனது தான், அதை பற்றி பேசி என்ன செய்வது, இனி வரும் காலங்களில் கவனமாக செயல்பட வேண்டும். கருத்து சுதந்திரம் உள்ள நாடு இல்லை. கருத்து சுதந்திரம் உள்ளதாக ஒப்புதலுக்காக சொல்கின்றனர். வழக்கு சிறை என்று அடக்கு முறையை வைத்து ஒடுக்கும் முறை ஜனநாயக நாட்டில் சரியில்லை. எங்களுக்கென்று வியூகம் கிடையாது. மக்களோடு மக்களுக்காக நிற்போம். எல்லா தொகுதிகளும் போட்டியிடுவோம். நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாக்குகள் சென்றுவிடும் என்று பாஜ பி டீம், கைக்கூலி என்று என்னைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புக்கின்றனர். கிறிஸ்தவ, இஸ்லாமிய ஓட்டுக்களை திமுக மொத்தமாக அறுவடை செய்கிறது. திமுக ஏமாற்றி வேலை செய்கிறது, இதனை நம்புகின்றனர். ஆர்எஸ்எஸ், திமுக இரண்டிற்கும் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. இந்த தேர்தலில் பாஜ இல்லை. திமுக, அதிமுக என்று தான் இருக்கும். பாஜ இன்னொரு கட்சியின் முதுகுக்கு பின்னால் தான் இருக்கிறது. இந்தத் தேர்தலில் இஸ்லாமிய மக்களின் ஓட்டுக்களை திமுக எளிதாக பெற முடியாது. இது ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் கூட்ட நெரிசலில் சிக்கி செத்துவிட்டது. நீ தான் காரணம், நீ தான் காரணம் என்று கரூர் சம்பவத்தை பட்டிமன்றம் போல் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். கரூர் சம்பவத்தில் தொலைக்காட்சிகளுக்கு பெரிய பங்கு உண்டு. திரையரங்கில் முதல் காட்சி பார்க்கக் கூடிய கூட்டம் இப்போது தெருவுக்கு வரும்போது வருகிறது. இரண்டு கட்சிகளும் பணம் வைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விடும். அந்த கட்சிகளுடன் தான் கூட்டணிக்கு போக அனைவரும் விரும்புவார்கள். எப்படியாவது இழுத்து கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று செய்கின்றனர். என்னுடன் பெரும்பாலும் கூட்டணிக்கு யாரும் வர மாட்டார்கள். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Durai Kuppusami
அக் 04, 2025 08:17

தமிழகத்தின் அரசியல் சாபக்கேடு நிருபர்கள் கூட்டம் என்ற பேர்ல நீ அடிக்கும் கூத்து தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது .... தாங்க முடியல தமிழக அரசியலில் பக்கா காமடி பீபீபீசு....


Venkat esh
அக் 03, 2025 22:02

அவ்வளவு ஒர்த் இல்லை.... திமுகவுக்கு டீம் என்று சொன்னால் பொருந்தும்.... இரண்டும் ஐந்தாம் தரம்... மக்கள் எவ்வளவு கொடுத்தாலும் அடாவடியாக உதறித் தள்ளிவிட்டு பிழைப்பு நடத்தும் வகையில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல


Aravindan
அக் 03, 2025 20:40

ஐயோ ராமா! யாரப்பா இவர் கையிலயெல்லாம் மைக்க கொடுக்குறாங்க ? தினம் தினம் தாங்கமுடியலடா சாமீ


Mecca Shivan
அக் 03, 2025 19:31

தம்பி நீ திமுகவின் பி டீம் என்று உறுதியாகிவிட்டது .. விஜய்க்கு எதிராக பேசுவதாக நினைத்து உன்னையறியாமல் திமுகவிற்கு போடும் ஜால்ரா சத்தம் ரொம்ப அதிகம்.


senthilanandsankaran
அக் 03, 2025 17:30

எதையுமே உன்னால பொய் கலக்காம சொல்ல முடியாது...எதையும் உருப்படியா செய்ய மாட்ட....நீ உன்னைய நீயே நினைச்சுக்குற...ஒரு ஆளுன்னு....இப்படியே 6 சதவீத கூட்டத்துக்கு ராஜாவா இரு...அவ்ளோதான்.


தலைவன்
அக் 03, 2025 17:01

தலைவன் இதோ வந்தேன்?? ஐயம் பேக் ??? சும்மா அதிரிதுல்ல ??


தலைவன்
அக் 03, 2025 17:00

அந்த சுப்பனுக்கு அப்பன் இருக்கிறான் அப்பனுக்கு பாட்டன் முப்பாட்டன் ஒருவர் ஆதாம் என்பவரை ஏற்று கொள்கிறார்கள்.


Vijay D Ratnam
அக் 03, 2025 16:24

பதட்டப்படாதீங்க சீமான், உங்களை யாரும் இங்கே பிஜிபியின் பி டீம் என்று சொல்லவில்லை. நீங்க மட்டும்தான் பினாத்திக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களை நம்பி திரியும் அரைவேக்காட்டு பசங்களை தவிர தமிழக மக்களுக்கு உங்களை நன்றாக தெரியும். ஆதித்தனார் அவர்களால் நிறுவப்பட்டு இது கதைக்காவாது என்று பரணியில் தூக்கி எறியப்பட்டது. அப்படி பலகாலம் முடங்கி கிடந்த நாம் தமிழர் கட்சியை தூசி தட்டப்பட்டு கொண்டு வந்து நிறுத்தியது எதற்கு என்று. திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பல்க்காக அதிமுகவுக்கு சென்று விடாமல் தடுக்க லைட்டாக டேமேஜ் செய்ய கட்டுமர கம்பெனியின் பைனான்சில் நடத்தப்படும் கமிஷன் மண்டிதான் நாம் தமிழர் கட்சி என்றும். கமிஷன் புரோக்கர்தான் சீமான் என்ற பெயரில் இருக்கும் சைமன் செபஸ்தியன் என்றும். நீங்க பேசாம உங்கண்ணன் பிரபாகரன் துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்தார், ரொட்டி சுட கற்றுக்கொடுத்தார், அண்ணி அம்சமா அமைக்கறி சமைச்சு போட்டாங்க. இட்லிக்குள்ள கறியை வச்சி சுட்டு போட்டாங்க, தொட்டுக்க காட்டுப்பன்றி குருமா போட்டாங்க என்று அள்ளிவிடுங்க பாஸ். ஒங்க தொண்டர் கூட்டம் கைதட்டி விசிலடிக்கும்.


raja
அக் 03, 2025 16:08

போன உயிர் போனதுதான் என்று 41 மனித உயிரை அவ்வளவு எளிதாக சொல்லி கடப்பது சீமானுக்கு அழகல்ல. 41 குடும்பங்களுக்கு யார் பொருப்பு உங்க 10 20 லட்சம் அப்பா அம்மா கணவன் மனைவி பிள்ளைகளை கொடுக்க முடியுமா. விஜய்கு சோப்பு போட வேண்டாம் ஆளும் கட்சி போல அவனும் ஒரு துண்டு சீட்டு.


Murthy
அக் 03, 2025 14:52

சொல்றது யார் என்றால் . ...பிஜேபியோடு கூட்டணி வைத்திருந்த கோபாலபுர திமுக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை