உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி கோலாகல துவக்கம்

கோவையில் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி கோலாகல துவக்கம்

கோவை:'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' எனும், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் துவங்கியது. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட மக்களின் ஷாப்பிங் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 'தினமலர்' மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து, ஒரே கூரை யின் கீழ் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற் றும் இல்ல கனவை நனவாக் கும் 'பில்டு எக்ஸ்போ' மற்றும் ஆட்டோ மொபைல், விதவிதமான உணவுகளை ருசிக்க உணவு திருவிழாவுடன் கூடிய, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, கோவை கலெக்டர் பவன்குமார், ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். 'தினமலர்' வெளியீட்டா ளர் இல.ஆதிமூலம், இணை இயக்குநர் ஆ.லட்சுமிபதி ஆதிமூலம், பி.ஆர்.ஓ., செந்தில் அண்ணா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன், 'சத்யா ஏஜன்சீஸ்' பொது மேலாளர் ஆபிரஹாம், எல்.ஜி., அல்ட்ரா நிறுவன இயக்குநர் பாலகிருஷ்ணன், 'பேபர்' நிறுவன மண்டல மேலாளர் விமலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சி வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ