உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் புகுந்த பாம்பு பிடிக்கச் சென்றவரை தீண்டியது

மருத்துவமனையில் புகுந்த பாம்பு பிடிக்கச் சென்றவரை தீண்டியது

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் புகுந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடித்த சமூக ஆர்வலர் பூனம்சந்த், பாம்பு தீண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டு பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால், மருத்துவமனை வளாகம் பரபரப்பானது. பாம்பைப் பிடிக்க, கடலூரைச் சேர்ந்த பாம்புகளைப் பிடிக்கும் சமூக ஆர்வலர் பூனம்சந்த்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு வந்த அவர், அங்கிருந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பாம்பைப் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக, பாம்பு அவரது கையை ஆக்ரோஷத்துடன் தீண்டியது. உடனே அவருக்கு, அதே மருத்துவமனையில் உள்ள விஷ முறிவு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை