உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நீதி புரட்டல்வாதிகளுக்கு ஓட்டளிக்கக்கூடாது: கிருஷ்ணசாமி

சமூக நீதி புரட்டல்வாதிகளுக்கு ஓட்டளிக்கக்கூடாது: கிருஷ்ணசாமி

மதுரை : ''மூச்சுக்கு முந்நுாறு முறை சமூகநீதி பேசும் தி.மு.க., ராஜ்யசபா தேர்தலில் மதத்தைச் சார்ந்தே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதே தவிர, இதில் சமூக நீதி எங்கே பிரதிபலிக்கிறது,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: தி.மு.க., அறிவித்த வேட்பாளர்களில் ஒருவர் கிறிஸ்துவர், மற்றொருவர் முஸ்லிம், இன்னொருவர் ஹிந்து. வெளிப்படையாகவே முஸ்லிம் - கிறிஸ்துவ ஓட்டு வங்கியை குறிவைத்து வேட்பாளர்களை தி.மு.க., நிறுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் தி.மு.க.,வால், கட்டவிழ்த்து விடப்படும் ஏமாற்று விளம்பரங்களுக்கு இரையாகி, ஓட்டுகளை அள்ளிக்கொடுக்கும் தேவேந்திர குல வேளாளர்கள், இதுபோன்று எளிதாக வெற்றி பெற்று, தங்களின் குரல் பார்லிமென்ட்டில் ஒலிக்கும் என எதிர்பார்க்கும் முக்கிய தருணங்களில் கைகழுவப்படுகின்றனர்; முற்றிலும் ஒதுக்கப்படுகின்றனர் என்பதை இனியாவது, புரிந்துகொள்ள வேண்டும். வருங்காலத்தில் சமூக நீதி புரட்டல்வாதிகளுக்கு ஓட்டளிக்கக்கூடாது என்பதை தேவேந்திர குல வேளாளர்கள், இனியாவது சிந்திக்க வேண்டும். அ.தி.மு.க., தனக்கு உள்ள இரு வாய்ப்புகளை யாருக்கு கொடுக்கப் போகின்றனர்; எப்படி சமூக நீதியை கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.V.Srinivasan
மே 30, 2025 08:11

நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க, நம்ம ஆளுங்க தேர்தல் நேரத்தில் கிடைக்கும் 500க்கும் குவாட்டருக்கும் அடிமை ஆகி பட்டனை அமுக்கிட்டு வந்துடறாங்களே.


VENKATASUBRAMANIAN
மே 30, 2025 07:51

இதுதான் திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை