உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூகநீதி vs உண்மையான சமூகநீதி; ராமதாஸ் சொல்வது இதுதான்!

சமூகநீதி vs உண்மையான சமூகநீதி; ராமதாஸ் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 100% இடப்பங்கீடு, சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாள் இன்று; மீண்டும் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாளே உண்மையான சமூகநீதி நாள் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.அவரது அறிக்கை: சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையாவால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை போற்றுவோம், நன்றி கூறுவோம்.1921ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பனகல் அரசர் தலைமையிலான அரசின் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான அரசாணை எண் 613 நிறைவேற்றப்பட்டாலும் இடப்பங்கீடு உடனடியாக நடைமுறைக்கு வந்து விட வில்லை. கிட்டத்தட்ட 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தான் சென்னை மாகாண மக்களுக்கு 100% இடப்பங்கீடு சாத்தியமானது. இந்தியா விடுதலையடைந்து 1950ம் ஆண்டு வரையிலும் சில, பல குறைகள் இருந்தாலும் 100% இடப்பங்கீடு நடைமுறையில் இருந்தது. சமூகநீதிக்கு எதிரான சதிகாரர்களின் சூழ்ச்சியால் தான் 100% இடப்பங்கீடு நீதிமன்றங்களின் துணையுடன் வீழ்த்தப்பட்டது. 104 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, 97 ஆண்டுகளுக்கு முன் இடப்பங்கீட்டை சாத்தியமாக்கிய இந்த சமூகநீதி மண்ணில் தான் இன்று சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சுயநலத்தாலும், அக்கறையின்மையாலும் அந்த முயற்சிக்கு தமிழக அரசும் துணை போய்க்கொண்டிருக்கிறது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 950 நாட்கள் ஆகும் நிலையில், அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் தொடங்கி சில மாதங்களுக்கு முன்பு வரை 50க்கும் மேற்பட்ட தடவை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி வந்த திமுக அரசு, திடீரென ஒரு நாள் நாங்களாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது; மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி, உழைக்கும் பாட்டாளி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது. சமூகநீதி போர்வை போற்றி, சமூக அநீதிக்கு சாமரம் வீசும் ஆட்சியாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்.தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழகத்தில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Duruvesan
நவ 04, 2024 22:38

ஆக நீட்ல 500 எடுத்தா ஐயனுக்கு சீட் இல்லை


தமிழ்வேள்
நவ 04, 2024 20:45

இந்த மரம் வெட்டறது கல்லு முட்டு எறியறது சரக்கடித்து மட்டை யாவது இதுக்கெல்லாம் கோட்டா இருந்தால் நம்ம கட்சி ஆட்களுக்கு தான் மருத்துவரே நூறு வீத ஒதுக்கீடு..அதுல நம்மளை அடிச்சுக்க ஆளே இல்லை... என்ன நான் சொல்றது?


rajan_subramanian manian
நவ 04, 2024 17:34

இதுக்கெல்லாம் ஒரே முடிவு மொத்த இடங்களை நூறிலிருந்து ஒரு ஆயிரம் சதவீதமாக மாற்றிவிட்டு எல்லோருக்கும் கொடுத்து சமூக நீதியை நிலை நாட்டலாம். என்னுடைய இந்த கருத்தை விக்ரவாண்டிக்கு விழுப்புரத்திற்கும் நடுவில் ஒரு மேடை போட்டு சொல்லப்போகிறேன். எனக்கு எல்லோரும் ஆதரவுத்தர வேண்டும். நமது ட்ரெய்ன் பஸ் எல்லாம் கும்மிடிப்பூண்டி வரைதான் செல்லும்படி ஆட்சிக்கு வந்ததும் சட்டம் போடுவேன். ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழி உள்ள நாடுகளுக்கு மட்டும் விமான அனுமதி. வீடு வீடாக சென்று தமிழ் மட்டும் எழுத படிக்க பேச தெரிந்தவர்களை ப்ராஹ்மணர்களுக்கு இந்த சலுகை கிடையாது மட்டும்அனுமதித்து அவர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்றால் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்றுவேன். தமிழ் நாட்டை ஒரு தமிழ் நாடாக்க இதை விட வேறு வழி இல்லை.


Smba
நவ 04, 2024 15:45

எவனும் கிடையாது இப்ப அது .M.G.R. என்ற கடவுளின்


Ms Mahadevan Mahadevan
நவ 04, 2024 15:29

சும்மா பழங்கதைகளை யே பேசி உரூட்டாதீர்கள். இன்றைய நிலை எல்லோருக்கும் சம வாய்ப்பு சம உரிமை. முந்தங்கியவன் பிந்தன்கியவன் என்று சுதந்திரம் வாங்கி 77 ஆண்டுகள் ஆகியும் மக்களை பிரித்து வைக்காதீர்கள் எல்லோருக்கும் இலவச கல்வி தரமான கல்வி அரசு தர வேண்டும் . ஆனால் உம்மை போன்ற அரசியல் சுக வாசிகளால் கல்வி வியாபாரமாக போய்விட்டது. இலவச கல்வி எல்லோருக்கும் அப்பிடி என்றால் யார் வேண்டுமானாலும் விரும்பியதை படித்து திறமையை காட்டி முன்னேறலாம் . அதை விடுத்து அவனக்கு 45 இவனுக்கு 10 அவளுக்கு 30 இதுக்கு7 அதுக்கு8 என்று மக்களை பிரித்து வைக்க வும். தொகுதியில் எந்த ஜாதி அதிகம் என்று பார்த்து வேட்பாளரை நிறுத்தியும் மக்களை பிளவுபடுத்த துவதும் ,பாரதி கண்ட ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதை நிலை நிறுத்தாமல் செய்வதும் உங்களை போன்ற அரசியல் சுக வாசிகள் தான் . உண்மையான சமூக நீதி இன் நாட்டில் வர அரசியல் கட்சிகள் விடாது


GMM
நவ 04, 2024 15:16

100 சதவீத இடப்பங்கு .கடல், ஆறு, மலை, பறவை, விலங்குகள் ஆகாயம் பங்கு எவ்வளவு. ? எப்படி பிரிக்க வேண்டும். எப்போதும் பிரிவினை சிந்தனை. கிருத்துவ, இந்து வன்னியர். எந்த சாதி எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு. எல்லா சாதியிலும் செல்வந்தர் ஏழை இருப்பர் . சாதி ஊர் கூடி, வரி பங்கு , எல்லை பாதுகாப்பு பங்கு கொடுக்க வேண்டும். முடியுமா? நீதிமன்ற சீர் திருத்தம் இந்த மாதம் துவங்கும்.?


ஆரூர் ரங்
நவ 04, 2024 14:56

பாதிக்குப் பாதி சாதிச்சான்றிதழ்கள் போலி. (ஐயாவின் சொந்த சர்டிபிகேட் பத்தி எனக்குத் தெரியாது). சாதிப் பிரிவு, மதம், வருமானம் மூன்றிலுமே போலிகள் ஏராளம். ஒரே குடும்பத்தில் நாலைந்து பேர் அரசு வேலையில் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக திமுக வுக்கு ஒரே சாதியினர் தலைமை. உங்க கட்சியின் லட்சணமும் எல்லோருக்கும் தெரியும். இதில் சமூகநீதியாவது மண்ணாவது?


Muralidharan raghavan
நவ 04, 2024 15:41

என்றுதான் இந்த ஜாதி அரசியல் முடிவுக்கு வருமோ என்பது தெரியவில்லை


சமீபத்திய செய்தி