உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை பொருள் விற்பனையகமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்

போதை பொருள் விற்பனையகமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'போதைப்பொருள் கடத்தல் கும்பல், இரவு நேரத்தில் தங்கும் இடங்கள், விடுதிகள், கல்லுாரிகளை குறி வைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றன' என, இ.பி.சி.ஐ.டி., எனும் அமலாக்க பணியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்பு பிரிவான அமலாக்க பணியகத்தின் இயக்குநர், கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: போதைப் பொருள் புழக்கம், வணிக ரீதியாக மிகப்பெரிய 'நெட் ஒர்க்' வாயிலாக செயல்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், தலைமைச் செயலர், கலெக்டர்கள், காவல் துறை, கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து ஒழுங்குமுறை துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். என்.சி.பி., எனும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை, கடலோர பாதுகாப்பு படை, கடற்படையினருடன் இணைந்து, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'வாட்ஸாப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் தற்போது போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் கடத்தல் கும்பல், இரவு நேர தங்கும் இடங்கள், விடுதிகள், கல்லுாரிகளை குறி வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றை பொது மக்களின் பங்களிப்புடன் முறியடித்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை