உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திரா, கர்நாடகா போல மாம்பழ பிரச்னைக்கு தீர்வு: தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை

ஆந்திரா, கர்நாடகா போல மாம்பழ பிரச்னைக்கு தீர்வு: தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை பின்பற்றி, மாம்பழ விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.தமிழகத்தில், 3.60 ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், 9.50 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், மாம்பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளன. அவற்றுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மாம்பழக்கூழ் தயாரிக்கும் பெங்களூரா ரக மாம்பழம், கடந்தாண்டு 20 முதல் 30 ரூபாய்க்கு ஆலைகளில் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு 4 ரூபாய்க்கு தான் வாங்கப்படுகிறது.தமிழகத்தில், 10க்கும் குறைவான இடங்களில் மட்டுமே மாம்பழக்கூழ் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றில் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது. 'இந்த மாம்பழங்களுக்கு டன்னுக்கு, 7776 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதில், மாம்பழக்கூழ் தயாரிப்பு தொழிற்சாலைகள் வாயிலாக டன்னுக்கு, 5000 ரூபாய்க்கு மாம்பழங்கள் கொள்முதல் செய்தால், 2766 ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். அதை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் டில்லியில் வழங்கினர்.இது குறித்து, மத்திய வேளாண் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மாம்பழங்கள் அதிகளவில் விளைகின்றன. நடப்பாண்டு வடமாநிலங்களில் பெரிய அளவில் பிரச்னை இல்லை. தென் மாநிலங்களில்தான் மாம்பழ விற்பனையில் பிரச்னை தலைதுாக்கியுள்ளது.கர்நாடகா, ஆந்திராவில், மாம்பழக்கூழ் தயாரிப்பு ஆலைகள் அதிகளவில் உள்ளன. இவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி ஊக்குவித்துள்ளது. தமிழக அரசு இதை பயன்படுத்தி, நேரடியாகவோ அல்லது தனியார் வாயிலாகலோ ஆலைகள் அமைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதுவே பிரச்னைக்கு காரணம்.கர்நாடகா, ஆந்திரா மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால், அங்குள்ள ஆலைகளில் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள தனியார் ஆலைகளில் கொள்முதல் மற்றும் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.ஆலை உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை, மாநில அரசு கண்காணிக்கவில்லை. பிரச்னை தீவிரம் அடைந்ததால், முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை பின்பற்றி, மாம்பழக்கூழ் ஆலைகளில் உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன்பின், கர்நாடகா மாநிலத்திற்கு குவிண்டாலுக்கு, 1,616 ரூபாய் மத்திய அரசு வழங்குவதுபோல, தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை பரிசீலிக்கப்படும் என, தமிழக அரசு குழுவினரிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

lana
ஜூன் 27, 2025 22:17

ஏம்பா பாவி tamilnadu goods and services tax Act ன்னு ஒன்னு இருக்குன்னு தெர்யுமா. தமிழகத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் ன்னு ஒரு துறை gst வசூலித்து வருகிறது தெர்யுமா. இதுக்கெல்லாம் ஒரு முந்திரி இருக்காரு ன்னு தெரியாம சமச்சீர் படித்து வந்து இங்கு முட்டு குடுக்க கூடாது.


அப்பாவி
ஜூன் 27, 2025 21:37

மாம்பழம் வித்தா அதுல ஜி.எஸ்.டி மட்டும் வாங்கிப்பாங்க. லெட்டர் எழுதுனா தப்பாம்.


Kjp
ஜூன் 27, 2025 22:35

முதலில் செய்தியை முழுவதும் படித்து விட்டு உம்முடைய காமெடி கருத்தை போடவும்.


lana
ஜூன் 27, 2025 19:20

நாங்கள் சாராய ஆலை துவக்கி சம்பாதிக்க மட்டும்தான் செய்ய முடியும். மீதி எல்லாம் ஒன்றிய அரசு மட்டும் தான் செய்ய வேண்டும். பிற ஆலைகள் துவக்கி எல்லாரும் வேலை க்கு போய் விட்டால் எங்கள் க்கு ஓட்டு போடும் எண்ணிக்கை குறைந்து விடும். டாஸ்மாக் இருக்கும் வரை திராவிட மாடல் சிறப்பாக இருக்கும்


Yasararafath
ஜூன் 27, 2025 18:46

இந்த மாம்பழங்களை வெளிநாட்டிற்கு அனுப்பினால் இலாபம் பார்க்கலாம்


panneer selvam
ஜூன் 27, 2025 19:14

It is not that easy , logistic is the most critical plus they face heavy competition from other countries especially Pakistan


Venukoppal, S
ஜூன் 27, 2025 17:59

மாநில சுயாட்சி, இரும்புக்கரம், வீணா போன மாடல் அப்படின்னு எல்லாம் வெட்டி உதார்...நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லை ...ரொம்ப கேவலம். ஒவ்வொருத்தர் மேலேயும் பல லட்சம் கோடி கடன்...அய்யோ அப்பப்பா...


Sethu Thangavelu
ஜூன் 27, 2025 16:00

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து நல்ல பணம் பண்ணி வந்தார்கள். 10 , 20 ரூபாய்க்கு விற்க வேண்டிய மாம்பழங்கள் நூறு இருநூறாக விற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் சண்டை ஏற்றுமதி இறக்குமதி நடைபெறுவதில் தாமதம். உள்ளூரில் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆனால் மக்களுக்கு விலை அதிகம் என்ற பயம் மாம்பழம் அழுகிறது


S.kausalya
ஜூன் 27, 2025 12:59

மத்திய அரசின் எதிர் லாவணி சூப்பர்


Venkat
ஜூன் 27, 2025 08:59

நமக்கு தெரிந்தது ரெண்டு தான் 1. 1000 ருபாய் இனாம் கொடுத்து ஒட்டு வாங்கறது 2 . மத்திய அரசை குறை சொல்றது. மக்களுக்கு புரியாதவரை இது தொடரும்


Nada Rajan
ஜூன் 27, 2025 07:25

ஆந்திரா கர்நாடகா போல மாம்பழ பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றி வையுங்கள் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு.. அவர்கள் தான் இந்த உலகத்திற்கு தெய்வம்


புதிய வீடியோ