உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்

திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சியில் தொடங்கினால் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e3fyq0p2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின், 'மக்கள் சந்திப்பு பிரசாரம்' திருச்சியில் இன்று (செப் 13) தொடங்கியது. முன்னதாக திருச்சி விமான நிலையம் வந்த விஜய்க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து 5 மணி நேரத்திற்கு பிறகு பிரசார கூட்டம் நடக்கும் இடத்திற்கு விஜய் வந்தார்.மரக்கடை அருகே எம்ஜிஆர் சிலை அருகே பிரசார கூட்டத்தில் விஜய் பேசியதாவது:எல்லோருக்கும் வணக்கம். அந்த காலத்தில் போருக்கு போகும் முன்பு, போரில் ஜெயிப்பதற்காக, குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு தான் போருக்கு போவார்கள். அந்த மாதிரி அடுத்த வருடம் நடக்க போகும் ஜனநாயக போருக்கு தயாராகும் முன்பு, நம் மக்களை, உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம் என்று வந்து இருக்கிறேன்.

திருப்பு முனை

ஒரு சில மண்ணை தொட்டால் ரொம்ப நல்லது. சில நல்ல காரியங்களை இந்த இடத்தில் இருந்து தொடங்கினால் ரொம்ப நல்லது என்று பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம், அந்த மாதிரி திருச்சியில் தொடங்கினால் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. 1956ம் ஆண்டு அண்ணாதுரை முதலில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்த இடம் திருச்சி தான்.

சொன்னீங்களே செஞ்சீங்களா?

அதற்கு பிறகு, 1974ம் எம்ஜிஆர் முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது. மலைக்கோட்டை இருக்கிற இடம், கல்விக்கு பெயர் போன இடம், மதச்சார்பின்மைக்கும், நல்லிணகத்திற்கும் பெயர் பெற்ற இடம், கொள்ளை உள்ள மண் இது. அதுமட்டுமல்ல இன்றைக்கு உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது, மனசுக்குள் பரவசம், எமோஷனல் வருகிறது. காஸ் சிலிண்டருக்கு மானியம் தரேன்னு சொன்னீங்களே செஞ்சீங்களா?

ஓட்டு போடுவீர்களா?

டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்போம் என்றீர்களே செஞ்சீங்களா?கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இலவசமாக பஸ்ஸை விட்டு விட்டு ஓசியில் போகிறார்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி எல்லாம் அசிங்கப்படுத்துவதற்கு செய்யாமல் இருக்க வேண்டியது தானே? வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? இவ்வாறு விஜய் பேசினார்.

தொழில்நுட்ப கோளாறு

விஜய் தேர்தல் பிரசாரத்தில் பேசிய இடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை. இதனால் 8 மணி நேரமாக காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜயின் பேச்சை கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

venugopal s
செப் 14, 2025 07:30

புதுப் பெண்டாட்டி மோகம் கொஞ்ச நாட்களுக்கு இருக்கத் தான் செய்யும்.ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்! பார்ப்போம்!


Tamilan
செப் 13, 2025 23:25

இனாமாக பத்திரிகைகள் விளம்பரம் செய்யும்போது ஸ்பீக்கர் வேலை செய்யாவிட்டால் என்ன கவலை ?


Madhavan
செப் 13, 2025 22:11

இப்படித்தான் அறுபதுகளில் நடந்தது. தி.க., தி.மு.க. கூட்டங்களுக்கு மக்கள் சென்றார்கள். பிறகு எழுபதுகளில் எம்.ஜி.ஆர். கூட்டங்களுக்கு சென்றார்கள். பின்னர் எண்பதுகளில் ஜெயலலிதா அவர்களின் கூட்டங்களுக்கு சென்றார்கள். கருணாநிதி அவர்களின் கூட்டங்களுக்கும் விஜய் காந்த் கூட்டங்களுக்கும் மக்கள் சென்றார்கள். இன்று ஏதோ விநோதமாக நடப்பதாக எவரும் எண்ண வேண்டாம். முந்தைய தலைமுறையின் வாரிசுகள் தங்கள் குலத்தின் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? தொண்டர்கள் மத்தியிலும் வாரிசு உள்ளது என்பதை அறிந்து நாம் பெருமை கொள்வோம்.


M.Sam
செப் 13, 2025 20:20

சினிமா நடிகன் பின்னால் போனது தமிழ் நாடு அது ஒரு காலம் ஆனால் தற்காலம் மிகவும் மாறி விட்டது இன்னமும் இவர்கள் நடிகனை நம்பினால் வரும் நாடகத்தை தான் காண்பார்கள் அது மட்டும் நிச்சயம். தமிழ்ர்களே தலைவர்களை திரையில் தேடாதீர்கள்.


SIVA
செப் 13, 2025 19:45

இன்று காசு வாங்காம வேலை செய்ய அந்த கட்சியில் மட்டுமே ஆட்கள் உள்ளனர் ....


D.Ambujavalli
செப் 13, 2025 18:51

கட்சி இன்னும் முளைவிடக்கூட இல்லை, அதற்குள், shootting க்கு நினைத்தபடி வருவதும் வந்த பிறகும் கூட்டத்தைக் காக்க வைப்பதுமான பந்தாவெல்லாம் கட்சி நிலைப்பட்டு, இரண்டு தேர்தலைப்பார்த்த பிறகு செய்ய வேண்டியவை. இன்று தொண்டனை, கூட்டத்தை மதிக்க வேண்டும் இதேபோல இன்னும் இரண்டு கூட்டத்தில் நடந்தால், காலி நாற்காலிகளுக்குத்தான் உரையாற்ற வேண்டும்


yts
செப் 13, 2025 18:37

தாவெக இப்போதுள்ள எப்போதும் வர முடியாது


Shanmuga Sundaram
செப் 13, 2025 18:28

விஜய் இன்னொரு கமல் ஆகலாம் ஆனால் என்றும் எம்ஜிஆரா ஆக முடியாது ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு எம் ஜி ஆர்


Oviya Vijay
செப் 13, 2025 18:15

திமுகவின் பி டீம் என விஜய்யை கூறும் நபர்கள் அவர் எதற்காக, அவருடைய எந்தத் தேவைக்காக திமுகவின் பி டீம்மாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை சற்று விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்... ஏனெனில் ஒரு ஆட்டுமந்தையில் ஒரு ஆடு திடீரென குதித்துச் சென்றால் பின்னே வரும் ஆடுகளும் ஏன் எதற்கு என்று சற்றும் யோசிக்காமல் அவைகளும் குதித்துச் செல்லுமாம்... அது போல யாரோ ஒரு ஆடு விஜயை திமுகவின் பி டீம் எனக் கூறிவிட அவருக்கு அவ்வாறு இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறதென்றே யோசிக்காமல் இங்கே மற்ற ஆடுகளும் அதையே புராணம் பாடிக் கொண்டிருக்கின்றனர்... கொஞ்சமாவது திருந்துங்கடே...


Balachandran Rajamanickam
செப் 16, 2025 11:00

ஓட்டு சதவீத அரசியல் தெரிந்தவநுக்கு தான் பி டீம் யாருனுன் தெரியும்


AMMAN EARTH MOVERS
செப் 13, 2025 17:58

தமிழ்நாட்ல பாஜக மாதிரி TVK வும் காணமல் போகும்


visu
செப் 13, 2025 19:55

நீங்க பயப்படுவதிலிருந்தே விஜய் வளருகிறார் என்று மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டி உள்ளது


HoneyBee
செப் 13, 2025 19:56

ஏன் திராவிட மாடல் காணாமல் போக கூடாது.. அடிமைகள் இருக்கும் வரை தான்...


புதிய வீடியோ