உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழை பொழிவை தந்த 2023: சென்னை, திருநெல்வேலியில் மிக அதிகம்

அதிக மழை பொழிவை தந்த 2023: சென்னை, திருநெல்வேலியில் மிக அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2022ஐ விட, 2023ம் ஆண்டில் அதிக மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.2023ம் ஆண்டில் பெய்த மழை அளவை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவமழை காலங்களில், 2022ஐ விட, 2023ல் அதிகமாக மழை பொழிவு இருந்துள்ளது என்றும், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில், மிக அதிகளவில் மழை பெய்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dveanlhe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்த புள்ளி விபரங்கள்: 2023ல், அக்டோபர் 1 முதல் டிச., 31 வரையிலான கால கட்டத்தில், வடகிழக்கு பருவமழை இயல்பாக, 44 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 4 சதவீதம் கூடுதலாக, 46 செ.மீ., பெய்துள்ளது. அதேநேரத்தில், 2022ல், 44 செ.மீ., பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழை, 2022ல், 48 செ.மீ., பெய்துள்ளது. 2023ல், 2022ஐ விட 13 செ.மீ., குறைவாக, 35 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது. அதாவது, 2022ஐ விட, 28 சதவீதம் குறைவாக, 2023ல் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது.கோடை கால மழையை பொறுத்தவரை, 2022ல் 17 செ.மீ., மழையும்; 2023ம் ஆண்டில், 20 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

பற்றாக்குறை எங்கே

கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருப்பத்துார் ஆகிய, 13 மாவட்டங்களில், 20 முதல், 55 சதவீதம் அளவுக்கு, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில், இயல்பை விட, 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

உபரி மாவட்டங்கள்

தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், இயல்பு நிலையில் இருந்து, 60 சதவீதம் வரை அதிகமாக மழை பெய்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலியில், 60 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.சென்னை, திருவள்ளூர், கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களில், 59 சதவீதம் வரை கூடுதல் மழை பெய்துள்ளது. 12 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்துள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையை பொறுத்தவரை, 2022ல், தென்மேற்கு பருவ மழை, 44 செ.மீட்டர்; 2023ல், 78 செ.மீட்டரும் பெய்துள்ளது. அதாவது, 2022ம் ஆண்டை விட, 2023ம் ஆண்டில், 77 சதவீதம் கூடுதலாக, தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவ மழை, 2022ம் ஆண்டில், 92 செ.மீ., பெய்துள்ளது. அதை விட, 18 சதவீதம் கூடுதலாக, 2023ம் ஆண்டில், 109 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

NicoleThomson
ஜன 03, 2024 15:30

ஆனாலும் இன்னமும் இரண்டு மாதத்தில் தண்ணீர் திறந்து விடுங்க என்று ஐடி விங் ஆரம்பித்து வைக்கும்


Chennaivaasi
ஜன 03, 2024 11:47

சமீபத்தில் பெய்த மழையில் அரசின் அறிவிப்பின் படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி விட்டன. ஆனால் நேற்று மதுராந்தகம் ஏரியை பார்த்தபோது கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. அதனை நம்பி விவசாயம் செய்யும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலை தான் பரிதாபம். அரசாங்கமே பொய் சொன்னால் எப்படி?


g.s,rajan
ஜன 03, 2024 10:28

Ellathukkum Varuna Bagavan Than Karanam....


அப்புசாமி
ஜன 03, 2024 09:39

ஒரு வருஷ சோத்தை ஒரு நாளில் தின்னுங்கற மாதிரி மழை பெஞ்சிருக்கு. இதில் அதிகம் குறைச்சல்னு புள்ளி விவரம் தேவையா?


g.s,rajan
ஜன 03, 2024 08:58

what about the Flood releif from the Central Government ...???.


Prasanna Krishnan R
ஜன 03, 2024 09:51

முதல் தவணைத் தொகையை மத்திய அரசு ஒதுக்கியபோது என்ன செய்தார் என்று உங்கள் முதல்வர் கேள்? அந்த உதயநிதி போல் வீண் பேச்சு பேசாதே.


mindum vasantham
ஜன 03, 2024 08:32

Romba ellam illai thirunelveli Thoothukudi mattum thaan athikam handle pannalai


Ramesh Sargam
ஜன 03, 2024 08:23

மழை அதிகம் பெய்து என்ன பயன்? அதை முறையாக சேமித்தோமா? இல்லை, எல்லாம் வீணாக கடலில் கலந்தது. மீண்டும் நாம் அண்டை மாநிலங்களிடம் பிச்சை கேட்கவேண்டும் தண்ணீருக்காக.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி