உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்

வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்

சென்னை: கடத்தல் குருவிகள் தற்போது புது வியூகத்தை பயன்படுத்தி, விமானத்தில் தங்கம் கடத்துவது தெரிய வந்துள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்படுகிறது. இதன் கீழ் சுங்க துறையும், மத்திய வருவாய் புலனாய்வு துறையும் செயல்படுகின்றன. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில், வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்படும் தங்கம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்வது, இத்துறையின் பிரதான வேலை. உலகளவில் தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலுக்கு என, 'சிண்டிகேட்' அமைத்து, இடைத்தரகர்கள், குருவிகள், வியாபாரிகள் செயல்படுகின்றனர். அதன்படி, சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் குருவிகள், 50 கிராம் முதல் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வருகின்றனர். இதில், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல வழிகளை, குருவிகள் கையாளுகின்றனர். இது குறித்து, சுங்க துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் குருவிகள், 'கமிஷன்' அடிப்படையில் கடத்தலில் ஈடுபடுகின்றனர். தங்கம் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்த பின், கடத்தல் குறைந்து வருகிறது. விமான இருக்கைகளில் பதுக்கி வைப்பது, உடைமைகள், மருந்து மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் பதுக்கி கடத்துவது போன்ற பழைய வழிகளை, நாங்கள் எளிதாக கண்டுபிடித்து விடுகிறோம். பொதுவாக, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு தான் தங்கம் கடத்தப்படும். அதாவது, துபாயில் இருந்து சென்னைக்கு அதிகளவில் தங்கம் கடத்துவர். தமிழகத்தில் தங்கத்திற்கு தேவை அதிகம் என்பதால், இந்த வழியில் வரும் கடத்தல் தங்கத்தை கண்டுபிடிக்க, சோதனைகள் கடுமையாக்கப்படும். அதில், எளிதாக பறிமுதல் செய்து விடுவோம்.ஆனால், சமீப நாட்களாக கடத்தல் குருவிகள் வேறு வியூகத்தை வகுத்து செயல்படுத்துகின்றனர். உள்நாட்டு விமான நிலையங்களில் சுங்க சோதனை கிடையாது. இதை பயன்படுத்தி, வழித்தடங்களை மாற்றி மாற்றி பயணம் செய்ய துவங்கி உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இரண்டு சம்பவங்கள் இது போன்று நடந்துள்ளன. கடந்த மாதம் 30ம் தேதி, கோல்கட்டாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில், ஒருவர் தங்கத்துடன் பிடிபட்டார். அவரிடமிருந்து, 409 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நபர் பயன்படுத்திய வியூகம் சற்று வித்தியாசமானது. துபாயில் இருந்து கடத்தல் தங்கத்துடன் வங்கதேச தலைநகர் டாக்கா சென்றுள்ளார்; அங்கிருந்து கோல்கட்டா வந்துள்ளார். பின், கோல்கட்டாவில் இருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கி விட்டார். நேரடியாக சர்வதேச விமான நிலையம் வந்தால் பிடிபட்டு விடுவோம் என்பதால், இந்த முறையை அவர் கையாண்டுள்ளார். ஆனாலும், நாங்கள் விரித்த வலையில் எப்படியோ சிக்கிக் கொண்டார். அவரை விசாரித்த போது தான், கடத்தல் சிண்டிகேட் வகுத்துள்ள இப்புதிய முறை தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Parthasarathy Badrinarayanan
ஜூலை 07, 2025 04:55

தமிழ் சினிமா பாருங்கள். கடத்தலை கற்கலாம்


Sivagiri
ஜூலை 06, 2025 13:57

பிரைவேட் ஜெட் , ஹைஸ்பீட் பைபர் படகுகள் , பிரைவேட் சொகுசு கப்பல்கள் , வைத்திருக்கும் , அதிபர்கள் , அரசியல்வாதிகள் , சினிமாக்காரர்கள் , இவர்களின் ஜெட்களை இன்ச் இன்ச்-ஆக சோதனை செய்வது சால சிறந்தது . . .


Sivagiri
ஜூலை 06, 2025 13:40

கப்பல்களில் வரும் கண்டைனர்களில்? நடுக்கடலில் கப்பல்களை நிறுத்தி, மீன்பிடிபடகுகள் மூலம்? அரேபியன் கரைகளில் பீச் ரெசார்ட்களில் இருந்து இந்திய மேற்கு கரைகளுக்கு, சில மணி நேரங்களில் வரும் ஹைஸ்பீட் பைபர் படகுகள் மூலம்? ட்ரோன்கள் மூலம்? இப்டியாக, டன் கணக்கில் நடக்கும் கடத்தல்கள் எல்லாம் மேலிட பார்வையாலே சரி செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான கிளைகள் பரப்பி உள்ள நகை கடைகளில் நகைககளாக பதுங்கி விடுகின்றன... விற்பனைக்காக அல்ல... சும்மா பதுங்கி இருந்தாலே போதும் என்று வைக்கப்பட்டுள்ளன . . . ஆனால் இந்த மாதிரி கிராம் கணக்கில் வரும் கடத்தல்கள் எப்போதாவது பிடி படுகின்றன, செய்திகள் ஆகின்றன . . .அதிலும் கூட , பல கிலோக்கள், சுங்க அதிகாரிகளின் வீடுகளுக்கு, மஞ்சப் பைகளில் சென்று தஞ்சமாகின்றன... குருவிகள்தான் மாட்டுகின்றன, லோக்கல் டாண்-கள்,, சர்வதேச டாண் டாண் -கள் எல்லாம் - பில்லா படத்தில் வருவது போல - மெர்சிடஸிகளிலும், ரோல்ஸ்ராய்ஸ்களிலும் பறக்கின்றார்கள் . . .


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 12:28

புது ரூட்டா அது என்ன புது ரூட்டு


Rathna
ஜூலை 06, 2025 12:00

சுங்கத்திற்கு எவ்வளவு பங்கு என்பது தான் கேள்விக்குறி? அதிகாரிகளின் உடந்தை இல்லாமல் நடப்பது குறைவு. இவர்களின் சொத்துக்கள் பல கோடிகளில் தேறும்.


Kulandai kannan
ஜூலை 06, 2025 11:06

கடத்தல் தங்கத்தை குருவிகளை வைத்துக் கொள்ளப் போவதில்லை. பெரிய நகை கடைகளும் இதற்கு உடந்தை.


VSMani
ஜூலை 06, 2025 10:42

குருவிகளுக்கும் குருவியை பிடிப்பவர்களுக்கும் அநேக லிங்க் உண்டு. குருவிகள் தங்கள் கொண்டு வரும் தங்கத்திற்கு கப்பம் கட்டி விடுவார்கள். பெயருக்கு ஓன்று அல்லது ரெண்டு குருவிகளை பிடித்து சீன் போடுவார்கள். வெளி நாட்டிலிருந்து சவூதி போன்ற பாலைவனத்திலிருந்து கடும் வெயிலில் கஷ்டப்பட்டு சம்பாத்தித்து மனைவி பிள்ளைகளை ஊரில் விட்டுட்டு ஒரு நல்லதுக்கும் கெட்டதுக்கும் போக முடியாமல் நம்ம நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஏற்படுத்திக்கொடுத்து, கொஞ்சம் தங்கம் அக்கா தங்கைகள் மகள் கல்யாணத்திருக்கு கொண்டு வந்தால் இந்த குருவி பிடிப்பவர்கள் நம்மை படுத்திடுகிற பாடு இருக்கிறதே கொஞ்சம் நஞ்சம் அல்ல. நான்கு ஐந்து மணி நேரம் விவாதம் செய்து வரி கட்ட வைப்பார்கள் . ஆனால் இவர்களிடம் லிங்க் ல இருக்கும் குருவிகளை கண்ணியமாக பாதுகாப்பாக விமான நிலையத்திலிருந்து வெளியே அனுப்பி வைப்பார்கள். இதுதான் நம் நாடு.


Arul. K
ஜூலை 06, 2025 13:43

எனது ஆதங்கத்தை அப்படிடையே வெளிப்படுத்தியமைக்கு நன்றி இதில் என்ன கொடுமையென்றல்ல சுங்கவரி எவ்வளவு என்று சொல்லுங்கள் அதை கட்டிவிட்டு செல்கிறேன் என்றால் அதையும் உடனடியாக சொல்லமாட்டார்கள். கிளி சீட்டு எடுப்பது போல் நமது கடவு சீட்டை திரும்ப திரும்ப பார்த்துவிட்டு அடுக்கி வைத்துக் கொள்வார்கள்


Bhaskaran
ஜூலை 06, 2025 10:35

திருச்சி விமான நிலையம் குருவிகளின் சொர்க்கபூமி


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 06, 2025 09:34

குருவிகளை அனுப்புபவர்கள், குறிப்பிட்ட சுங்க அதிகாரி டூட்டியில் இருக்கும் நேரத்தில் வரும் விமானத்தில்தான் குருவிக்கு ரிடர்ன் டிக்கெட் புக் செய்வார்கள்


Vijay
ஜூலை 06, 2025 08:20

இவர்களுக்கு மட்டும் மூளை குறுக்கு வழியில் எப்படி வேலை செய்கின்றது என்று புரியவில்லை.


சமீபத்திய செய்தி