உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்; வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்; வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால், கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vpljwede&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை உசிலம்பட்டி போலீஸ் கொலை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அவை முன்னவர் துரைமுருகன், 'கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்' என கோரிக்கை முன் வைத்தார். இதையடுத்து, சட்டசபையில் இ.பி.எஸ்., கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது' என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கடுமையான கூச்சல், குழப்பம் நிலவியது. தொடர்ந்து, கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு படி வெளியேற்றப்பட்டனர். பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சபாநாயகர் இடம் அனுமதி பெற்று தான் பேச வேண்டும் என்பது மரபு. சட்டசபை மரபுகளை முறையாக கடைபிடியுங்கள். கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து மட்டும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்ப கூடாது. சபாநாயகரை கை நீட்டி அச்சறுத்தும் வகையில் பேசுவதா? அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kasimani Baskaran
மார் 28, 2025 14:41

பாஜக என்றால் காங்கிரசும் தீம்காவும் கேள்விகேட்டு விட்டு தானே வெளியே ஓடிவிடுவார்கள்.. பங்காளிகளை இங்கு வெளியே அனுப்பி மானத்தை வாங்குகிறார்கள்.


Vageesan S K
மார் 28, 2025 13:31

இங்கு அ தி மு க செய்தால் அது தவறு ஆனால் அதையே தி மு க பார்லியில் செய்தால் அது சரி போல


S.L.Narasimman
மார் 28, 2025 12:47

அந்த காலத்திலிருந்து விடியல் குரூப் சட்டசபையிலே செய்யாத அடாவடித்தனத்தையா அதிமுகாவினர் செய்திருப்பார்கள்.


Kasimani Baskaran
மார் 28, 2025 12:41

பங்காளிகள் போல நடக்கவில்லை என்றால் சபாநாயகர் விடுவாரா...


LAKSHMI NARASIMAN
மார் 28, 2025 12:39

WHEN YOU ARE IN OPPOSITTE PARTY IN TAMILNADU OR NOW INPARLIMENT WHETHER YOU YOUR PARTY MP AND MLA FOLLOWING ALL THE RULE AND REGULATION, IN INDIA YOUR PARTY ONLY DEMOCRTIC MURDER OF THE YOUR PARTY IN THE PAST AND PRESENT,


Ramesh Sargam
மார் 28, 2025 12:35

சட்டசபை மரபுகளை முறையாக கடைபிடித்ததா இந்த திமுக அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது?


Rangarajan Cv
மார் 28, 2025 12:31

In parliament his MPs are following different guidelines?


எவர்கிங்
மார் 28, 2025 12:06

பா.ஜ.க கூட்டணி சந்தேக வயிற்றெரிச்சல்


பாமரன்
மார் 28, 2025 11:56

சமீபகாலமாக நல்ல லட்சனமான எதிர் கட்சியாக ஆயிடீம்கா சட்டசபை நடவடிக்கைகளில் இருந்து வந்தது புதுசா காண்ட்ராக்ட் எடுத்த ஓனர் கண்ணை உறுத்தியதால் இனி தினமும் ஒரு சவுண்ட் விடுவாங்க...‌அல்லது சவுண்ட் விட காரணம் இல்லைன்னா அதுக்கு ஒரு சவுண்ட் விடுவாங்க... பன்னிக்குட்டி கூட சேர்ந்து கன்னுக்குட்டி எதையோ திங்குமாம்... அதுபோல ஆயிடிச்சு ஆயிடீம்கா பொழப்பு...2026 தேர்தலில் நல்ல டீசண்டான பெர்ஃபார்ம் பண்றதுக்கு இருந்த வாய்ப்புக்கு ஊஊஊஊஊதான்


G Mahalingam
மார் 28, 2025 11:20

திமுக மரபை பற்றி பேச யோக்கியதை கிடையாது. பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் பாராளுமன்ற சபாநாயகரை மதிக்க மாட்டார்கள் ஆனால் சட்டமன்ற சபாநாயகரை பேச்சை கேட்க வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 28, 2025 11:41

இதே திமுகவினர் 2016 முதல் 2021 வரையிலான சட்டமன்ற கூட்டங்களில் மரபு பிறழாது கலந்துகொண்டு செயலாற்றியதை அனைவரும் நினைவில் கொள்ளவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை