உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிகளின் வழக்குகளை முடிக்க காவல் துறையில் சிறப்பு ஏற்பாடு

ரவுடிகளின் வழக்குகளை முடிக்க காவல் துறையில் சிறப்பு ஏற்பாடு

சென்னை:தமிழகத்தில், 26,000க் கும் அதிகமான ரவுடிகள் உள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணிக்க, ஒ.சி.ஐ.யு., எனும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களிலும், மத்திய குற்றப்பிரிவிலும், ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு உள்ளது. அதன் தொடர் நடவடிக்கையாக, காவல் நிலைய எல்லைகள் வாரியாக ரவுடிகளின் நடமாட்டம், அவர்கள் அடிக்கடி வந்து செல்லும் இடங்கள் போன்றவற்றை கண்காணிக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கவும், 12 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 1,300 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ரவுடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள போலீசார், ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள்ளும், எத்தனை ரவுடிகளின் வீடுகள் உள்ளன. அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்கள், அவர்கள் சிறையில் உள்ளனரா அல்லது ஜாமினில் வெளிவந்து வெளியில் தங்கி உள்ளனரா என்ற விபரங்களை சேகரிப்பர். ரவுடிகளின் பகைமை குழுக்கள், பழிக்கு பழி வாங்க சதி திட்டம் தீட்டினால், முன்கூட்டியே விசாரித்து அதை முறியடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை