வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Waste of Time Nothing is going to happen
Waste of Time Nothing is going to happen
சென்னை: தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய பிரத்யேக செல்போன் செயலியை திமுக அறிமுகம் செய்ய இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளில் திமுக தீவிரமாக இறங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களில் பல்வேறு அணிகளின் சார்பில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. சட்டசபை தொகுதிகளின் கள நிலவரங்களையும் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறார்.தேர்தல் அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக ஏற்கனவே அமைத்துள்ளது. அக்குழுவினரும் தங்களது பணிகளை தொடங்கி உள்ளனர். இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டமும் நடைபெற்று முடிந்துவிட்டது.இப்படியான சூழ்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பதை அறியும் பொருட்டும், மக்களின் கருத்துகளை கேட்கும் வகையிலும், பிரத்யேக செல்போன் செயலி(App)யை திமுக அறிமுகம் செய்கிறது. திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நாளைய தினம்(டிச.31) இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறார். இந்த செயலி மூலம் மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் அல்லது கோரிக்கைகளை தெரியபடுத்தலாம்.
Waste of Time Nothing is going to happen
Waste of Time Nothing is going to happen