உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி இன்று துவக்கம்

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி இன்று துவக்கம்

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று முதல் துவங்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி சமீபத்தில் நடைபெற்றது. அதை போலவே, நாடு முழுதும் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டில்லியில் நேற்று வெளியிட்டார். அதன்படி, தமிழகம், கேரளா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்கள் ஆகிய 12 மாநிலங்களில், ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி துவங்க உள்ளது. இந்த நடவடிக்கை நேற்று நள்ளிரவு 12:00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் விபரங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் துவங்குகின்றன. கடைசியாக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, 2002 - 04ல் நடந்தது. 21 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய அளவிலான திருத்தப் பணி நடப்பது இதுவே முதன்முறை. இப்பணியை மேற்கொள்ளும், பி.எல்.ஓ., எனப்படும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் விபரங்களை சரிபார்ப்பர். இதற்காக, முக்கிய அரசியல் கட்சிகள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை அமர்த்திக் கொள்ள முன்வர வேண்டும். இந்த அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று முறை சென்று சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வர். இதற்காக, 1,200 ஓட்டுச்சாவடிகள் வரை அமைக்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஒரு தேர்தல் பதிவு அலுவலர் நியமிக்கப்பவார். அவர் சப் - கலெக்டர் அந்தஸ்தில் இருப்பார். அவர் தான் வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிப்பார். ஆட்சேபனைகள், கோரிக்கைகள் இருந்தால், அது குறித்தும் முடிவெடுப்பார். இந்த சரிபார்ப்பு நடவடிக்கை மூலம், போலி வாக்காளர்களின் பெயர்கள் ஒன்று விடாமல் நீக்கப்படும். குறைகள் தெரிவிக்க விரும்பினால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், அது குறித்து முறையிடலாம். அடையாள சரிபார்ப்புக்கு ஆதார் அட்டை ஏற்றுக் கொள்ளப்படும். விபரங்களை சரிபார்த்து பதிவு செய்து கொள்வதற்கு என, பிரத்கேய படிவம் வழங்கப்படும். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில், அசாமில் மட்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் காரணமாக, இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால அட்டவணை 1. திருத்தப்பணிக்கான அச்சடிப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் இன்று முதல் துவங்கி, நவம்பர் 3 வரை நடக்கிறது. 2. சரிபார்ப்பு பணிகள் அனைத்தும், நவ., 4ல் துவங்கி, டிச., 4 வரை நடக்கும். 3. வரைவு வாக்காளர் பட்டியல், டிசம்பர் 9ல் வெளியிடப்படும். 4. ஏதாவது குறைகளோ, எதிர்ப்போ, கோரிக்கைகளோ இருந்தால், டிச., 9 முதல் 2026 ஜன., 8க்குள் முறையிடலாம். 5. குறைதீர்ப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் டிச., 9 முதல் ஜன., 31 வரை நடத்தப்படும். 6. இறுதி வாக்காளர் பட்டியல், 2026 பிப்., 7ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். வாக்காளருக்கான தகுதிகள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் ஓட்டளிக்க விரும்பும் தொகுதியில் வசிக்க வேண்டும் எந்த ஒரு சட்டத்தின் கீழும் தகுதியிழந்திருக்க கூடாது. -நமது டில்லி நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramona
அக் 28, 2025 10:15

களவாணிகள் இனி ஓட்டு போட முடியாதா? அதுதான் தாங்க முடியாத வேதனையா உள்ளது..


Sivak
அக் 28, 2025 09:13

திருப்பூர் ல பங்களாதேஷிகளை சலிச்சு எடுக்கணும் ... நாட்டை விட்டே துரத்தணும் ...


Iyer
அக் 28, 2025 08:24

தமிழ்நாட்டில் வேலைசெய்துகொண்டிருக்கும் வடக்கிந்தியர்கள் அனைவரும் பாரத பிரஜைகள் தானே. அவர்களது VOTER CARD ஐ தமிழ்நாட்டிற்கு மாற்றி அவர்களுக்கும் ஓட்டளிக்க வசதி செய்து கொடுக்கணும். ஆனால் தமிழ்நாட்டில் வேலை செய்யும் பங்களாதேசிகள் ரோஹிங்யாக்கள் பெயரை VOTER LIST ல் இருந்து நீக்கி அவர்களை நாடு கடத்தணும்.


Chess Player
அக் 28, 2025 06:50

வேண்டிய ஒன்று. பல வெளி நாட்டவர் குறிப்பாக பங்களாதேஷியினர் ஊடுருவி இருக்கிறார்கள் .


Kasimani Baskaran
அக் 28, 2025 04:10

வெளிநாட்டவர் பெயர்கள் நீக்கப்பட வேண்டும்.


சமீபத்திய செய்தி