உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சு காங்., - எம்.பி.,யால் சலசலப்பு

ஜாதி இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சு காங்., - எம்.பி.,யால் சலசலப்பு

காங்கிரஸ் கட்சியில் உள்ள தலித் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய, அக்கட்சி எம்.பி.,ஜெயகுமார், ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையே நல்லது என அவர் கூறியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர் தொடர்ந்து பேச அனுமதிக்காத கட்சியினர், மைக்கை பறித்து, அவரை வலுக்கட்டாயமாக பிடித்து நாற்காலியில் அமரவைத்தனர்.'தலித் உரிமைகள், சமூக நீதிக்கான பயிற்சி பாசறை' தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., அணி தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது.கருத்தரங்கில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், எஸ்.சி., அணி தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, முன்னாள் மாநில தலைவர் அழகிரி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன் பேசுகையில், ''மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், சுசில்குமார் ஷிண்டே போன்றவர்கள், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டில் போட்டியிட, காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்தது. ''அந்த தலைவர்களும் வெற்றி பெற்று, முன்னணி தலைவர்களாக உள்ளனர். அவர்களை போல தலித் சமுதாய நிர்வாகிகளும் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி, நாளைய தலைவர்களாக உருவாக வேண்டும்,'' என்றார்.காங்கிரஸ் எம்.பி., ஜெயகுமார் பேசுகையில், ''ஜாதி ரீதியான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும்; பொருளாதார ரீதியான அடிப்படையில், இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும். ''பொதுத் தொகுதியில் நான் போட்டியிட தயார். 'கிரீமிலேயர்' கொள்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்,'' என்றார்.உடனே கூட்டத்தில் இருந்தவர்கள், கட்சி கொள்கைகளுக்கு முரணாக பேசுவதாகவும், பேச்சை உடனே நிறுத்துமாறும் குரல் கொடுத்தனர். சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஜெயகுமாரை வலுக்கட்டாயமாக அமர வைத்தனர். பின், அஜோய்குமார் பேசுகையில், ''ஜெயகுமார் பேசியது தவறு. அவரது பேச்சை வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் கட்சியில், தலித் சமுதாயத்தினர் அதிகமாகஉள்ளனர். ''அவர்களின் உரிமைக்காக கட்சி போராடி வருகிறது. ஜாதி இடஒதுக்கீடு தான் தலித் சமுதாய மக்களை முன்னேற வைத்துள்ளது; பாதுகாத்து வருகிறது,'' என்றார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

saravanan
பிப் 22, 2024 11:01

மக்கள் நாடி துடிப்பை அறிந்து பேசிய முதல் காங்கிரஸ்காரர் , அவருடைய கருத்தை நான் வரவேற்க்கிறேன் .


மேலும் செய்திகள்









புதிய வீடியோ