உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுவானில் விமானம் டயர் வெடித்தது; சென்னையில் அவசர தரையிறக்கம்!

நடுவானில் விமானம் டயர் வெடித்தது; சென்னையில் அவசர தரையிறக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.ஜெய்ப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று (மார்ச் 30) அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mg49ulez&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு, விமானி தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்தார். சென்னை வந்தடைந்த உடன், அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி அளிக்கும்படி கட்டுப்பாட்டு அறையில் கோரிக்கை வைத்தார். அவருக்கு அனுமதி வழங்கிய நிலையில், விமானம் அதிகாலை 5:46 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்து சேதமடைந்தது தெரியவந்தது. SG9046 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில் சாதுரியமாகச் செயல்பட்ட விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தைத் தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
மார் 30, 2025 18:13

ஆமா டயர் ஆகாயத்தில் எப்படி வெடிக்கும்???தரையில் ஓடும்போது மட்டும் தான் டயர் வெடிக்கும்???


Petchi Muthu
மார் 30, 2025 15:50

பயணிகளுக்கு வயிற்றில் பயம் தோன்றி இருக்கும்.. உயிர் போய் விடுமோ என்று


Rangarajan Cv
மார் 30, 2025 15:32

Good skill of the pilot. Should be appreciated as lives of many people were taken to safety. SG aircrafts are looking old


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை