உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரிகளில் விளையாட்டு போட்டி: 29ல் நடத்த மத்திய அரசு உத்தரவு

கல்லுாரிகளில் விளையாட்டு போட்டி: 29ல் நடத்த மத்திய அரசு உத்தரவு

சென்னை: தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த, மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய ஹாக்கி அணிக்கு தலைமை ஏற்று, எட்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஏழில் தங்கமும், இரண்டு ஒலிம் பிக் போட்டியில் பதக்கமும் வென்றவர் தியான் சந்த். அவரின் பிறந்த நாளான வரும் 29ம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நாட்டின் விளையாட்டுகளை மேம்படுத்தவும், ஒலிம்பிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத்திய விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாட்டில் உள்ள பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், வரும் 29 முதல் 31ம் தேதி வரை, உடற்பயிற்சி, குழு விளையாட்டுகள். தனிநபர் விளையாட்டுகள், விளையாட்டுகள் தொடர்பான பேச்சு, விவாதங்கள், சைக்கிள் ஓட்டுதல், மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளை, 'மேஜர் தியான் சந்த் கோப்பை' என்ற பெயரில் நடத்தி பரிசுகள் வழங்க, மத்திய கல்வி அமைச்சகம் அறிவு றுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ