உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு, காரம் பாக்ஸ்கள் அறிமுகம்

தீபாவளிக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு, காரம் பாக்ஸ்கள் அறிமுகம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய தொகுப்பை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐந்து வகை முறுக்கு, அதிரசம், மைசூர்பாகு, திரட்டிப்பால், கிளாசிக் லட்டுகள் இருக்கும். தீபாவளி பக்ஷணம் பெட்டியில், இனிப்பு வகை உணவுகள், அதிரசம், கை முறுக்கு, தட்டை, மிக்சர் ஆகியவை இருக்கும். லேகியம், கங்கை நீர், சீயக்காய் மற்றும் மூலிகை எண்ணெய் இருக்கும். 'ரீயூனியன்' பெட்டியில், ஆலு பூஜியா, பாதாம் மிக்சர், பாம்பே மிக்சர், கடாக் மிளகு தட்டை, தேன்குழல், கும்பகோணம் காபி பொடி, கடலை மிட்டாய் துண்டுகள், சுக்கு மிட்டாய், நான்னாரி மிட்டாய் ஆகியவை இருக்கும். இந்த இனிப்பு, கார வகை உணவுகள், இன்று முதல் 20ம் தேதி வரை அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். 1800 102 2343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ