உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ.35 லட்சம் அபராதம் இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ.35 லட்சம் அபராதம் இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம்:இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் அபராதம் விதித்து விடுதலை செய்தது. ஜூன் 30ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆரோக்கியடேனியல் என்பவரது படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த மீனவர்கள் பெரிக், சசிகுமார், சீனு, மூக்கூரான், சரவணன், காளிதாஸ், செந்தில் ஆகிய 7 பேரையும் கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம் கடலில் மூழ்கிய வலையை மீனவர்கள் தேடி வந்த போது கைதாகினர். இதனால் மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ. 1.25 லட்சம்) அபராதம் விதித்து விடுதலை செய்தது. இந்த அபராதத்தை செலுத்த தவறினால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்படுவார்கள் என மீனவ குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக., 29 வரை சிறை இதுபோல இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை வவுனியா சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நேற்று மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீனவர்களை ஆக., 29 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை