உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ

கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோயில்: கன்னியாகுமரியில் எஸ்எஸ்ஐ ஒருவர் ஓய்வு பெற்ற நாளில் 17 கி.மீ.,ஓடிய படியே வீட்டுக்கு சென்றடைந்தார்.பொதுவாக அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கடைசி நாள் அன்று, பாராட்டு விழா நடத்தி கவுரவித்து காரில் அழைத்து வந்து விடுவது வழக்கம். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இது செய்யப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே இதில் வித்தியாசமாக செயல்படுவார்கள்.அந்த ஒரு சிலரில் ஒருவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் உள்ளார்.இவர், கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு 1984 ல் போலீசில் பணியில் சேர்ந்தார். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து என பல பிரிவுகளில் பணியாற்றி உள்ளார். அவரின் நேர்மை மற்றும் பணி காரணமாக உயர் அதிகாரிகளின் பாராட்டையும், பொது மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர். அவருக்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தில் எப்போதும் ஆர்வம் கொண்டவர்.அவர் பணியாற்றிய கோட்டூர் போலீஸ் ஸ்டேசனில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும், வழக்கப்படி,அங்கிருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள கன்னியாகுமரி அடுத்த பூவியூரில் உள்ள வீட்டில் ஜீப்பில் அழைத்து செல்ல அதிகாரிகள் தயாராக இருந்தனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த பாலகிருஷ்ணன், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீட்டிற்கு ஓடிச் செல்வதாக கூறினார். இதன்படி போலீஸ் ஸ்டேசனில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டிற்கு ஓடிய படியே சென்றார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Dhandapani Marappan
ஆக 01, 2025 15:54

Nothing going to happen in the world .


Guru Sree
ஆக 01, 2025 12:46

இவரை போன்றவர்களே இன்றைய இளம் தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டி.. இவரின் ஓய்வு கால வாழ்வில் இவரை சந்தோசமாக வைத்து கொள்ள இறைவனை வேண்டுவோம்.


Sankar P. V
ஆக 01, 2025 08:48

நான் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் 32 ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.எனது ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் எனக்கு உரிய காலத்தில் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட கருவூலம் மற்றும் ஊரக வளர்ச்சி அலகு பணியாளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.


VENKATASUBRAMANIAN
ஆக 01, 2025 07:52

இருக்கின்ற நல்ல காவலர்களில் ஒருவரும் ஓய்வு பெற்றுவிட்டார்.


ரங்ஸ்
ஆக 01, 2025 07:34

நல்ல முன்னுதாரணம். காசு பணத்தைவிட உடல்நலம் பேணுதல், ஒழுக்கம் முக்கியம் என உணர்த்தியுள்ளார்.


Arul. K
ஆக 01, 2025 07:28

அய்யா சாமீ விட்டால் போதும் என்று ஓடி வருகிறார் போல உள்ளது. ஓய்வு காலத்தை நிம்மதியாக குடும்பத்துடன் கழிக்க இறைவனிடம் பிரார்திக்கின்றேன்


Kasimani Baskaran
ஆக 01, 2025 04:00

நல்லதொரு முன்னுதாரணம்.


இராம தாசன்
ஆக 01, 2025 03:12

தலை வணுங்குகிறேன் ஐயா - காலணி கூட இல்லாமல் 17 கிலோ மீட்டர் ஓடி வந்துள்ளீர்கள். நினைத்து பார்க்க கூட முடியவில்லை


M Ramachandran
ஆக 01, 2025 00:47

நம் சென்னை காவல்துறையில் இது மாதிரி காவல் துறை அதிகாரியை பார்க்க முடியுமா? ஒரு சிலரென எடுத்து காட்டாக திகழ்வர். அவருக்காக அரசு கொடுத்த சம்பளம் சரியான நபருக்கு தான் போய் சேர்ந்துள்ளது. அதன் பின் தான் உள்ளது. ஒழுங்காக அவருக்கு சேர வேண்டிய ரிடியர்மென்ட் க்ராஜயூட்டி பென்ஷன் செட்டில்மென்ட் ஒழுஙகாக வருமா? இதை கவனிக்கும் அட்மின் எப்போதுமெ வழ வழா கொழ கொழ தான். தமிழ்நாடு எல்லா அரசு துறையிலும் இந்த கதி தான்.


Arachi
ஆக 01, 2025 00:41

பாராட்டுக்கள் ஒரு அரசு ஊழியராக நற்பணியாற்றிருக்கிறார். அநேக அரசு ஊழியர்கள் தன்னை Government master என்று நினைக்கும் இக்கால கட்டதில் இவர் ஒரு முன் உதாரரணமாக இருக்கிறார் . கற்றுக்கொள்ளுங்கள் தற்போதைய அரசு பணியாளர்கள் இவரைப்பார்த்து.


முக்கிய வீடியோ