உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தும் ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

7 மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தும் ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

மதுரை : பா.ம.க., தலைவர் அன்புமணி மதுரையில் அளித்த பேட்டி: எனக்கு, 100 நாட்க ள் நடைபயண நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி கொடுத்தனர். இப்போது, நடை பயணத்திற்கு அனுமதி இல்லை; பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஜனநாயக கடமை ஆற்ற, அவர்கள் தான் மக்களை தேடிச் செல்ல வேண்டும்; கட்சிகளை தேடி மக்கள் வரக்கூடாது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது என்பதுதான் நீதிமன்றம் சொல்லும் நிபந்தனை. தனியார் இடங்களில் நடத்தலாம் என்கின்றனர். அப்படியொரு இடம், ஊருக்கு வெளியில்தான் கிடைக்கும். அங்கு பொதுமக்கள் எப்படி வருவர்? ஊழல் செய்து கொள்ளையடித்த கட்சிகள்தான், மக்களை அழைத்துச்செல்ல முடியும். மூன்று ஆண்டுகளில், 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மோசமான மாநிலத்தில், மோசமான ஆட்சியில் நாம் இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலினுக்கும், விவசாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கலாம் என, கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு பிறகும், முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருக்கிறார். ஏழு மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து விட்டனர். தமிழகத்தில் மட்டும் அதிகாரம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்னத்த சொல்ல
அக் 07, 2025 10:44

சாலைகளில் கூட்டம் போட நீதிமன்றத்தை நாடவும். உங்கள் சாதிதான் பெருசுனு காண்பிங்க ...


m.arunachalam
அக் 07, 2025 10:37

குற்றம் செய்பவர்கள் பற்றியும் ஜாதிவாரியாக கணக்கெடுக்க வேண்டும் .


Indian
அக் 07, 2025 10:01

எப்ப பார்த்தாலும் சாதி பேச்சு தானா ??


shyamnats
அக் 07, 2025 09:01

சாதிய கட்சியாகவே தன்னை காலங்காலமாக அடையாளப்படுத்தும் இவரை மற்ற சாதி, மத கட்சி பொது மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்? தமிழக மக்கள் அனைவருக்குமான தலைவராக தன்னை மாற்றினால்தான் இவருக்கு அதிகார பதவிகள் கிடைக்கும். சமீப காலமாக நடக்கும் குடும்ப சண்டைகள் மக்கள் மத்தியில் இவர்கள் மதிப்பை மேலும் சீரழிக்கிறது


Arjun
அக் 07, 2025 10:49

உண்மையை பேசினால் கசப்பாகதான் இருக்கும் .திமுக சாதி, மத அரசியல் செய்கிறது


raja
அக் 07, 2025 08:15

என்னைக்கு உண்மையை பேசி இருக்கார்...