உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மறதியால் ஸ்டாலின் பேசியிருக்கலாம்: அடிமை பேச்சுக்கு விஜய் பதிலடி

 மறதியால் ஸ்டாலின் பேசியிருக்கலாம்: அடிமை பேச்சுக்கு விஜய் பதிலடி

சென்னை: 'தமிழகத்தில் அடிமையாக இருந்து, தாமரை மலருக்கு தரிசனம் செய்து, இருந்த இடத்தை மறைக்க முடியாமல், மனதில் இருந்ததை ஒருவித மறதியால் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கலாம்' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார். அவரது அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w3xz5wyb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வரே பழைய அடிமை, புதிய அடிமை என பூடகமாக பேசி, யார் மீதோ கல்லெறிவதாக எண்ணி களிப்புறுகிறார். பாவம் அவர்; தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்புதான் நின்று பேசுகிறோம் என்பதை மறந்து விட்டார். குறைந்தபட்ச செயல் திட்டம் என்றெல்லாம் மக்களை குழப்பி, 1999 முதல் 2003 வரை அடிமையாக இருந்து, தமிழகத்தில் தாமரை மலருக்கு தரிசனம் செய்து, இருந்த இடத்தை மறைக்க முடியாமல், மனதில் இருந்ததை ஒருவித மறதியால் பேசி இருக்கலாம். காரணம் எதுவாகினும் கொண்டையை மறைக்க இயலாமல், குட்டு வெளிப்பட்டு விட்டது. வழியெங்கும் வாஞ்சையுடன் நின்று வரவேற்கும் மக்கள், நமக்கு ஓட்டளிப்பர் என்பதை எண்ணி, இப்போதே குமைச்சல் அடைகின்றனர். இனி அவர்களின் ஏசுதலையும், ஏகடியம் பேசுவதையும் புறந்தள்ளி, மக்களுடன் மக்களாக இணைந்து களமாடுவதில், த.வெ.க.,வினர் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் நரி தந்திர சூழ்ச்சிகளை, ஆழமாக புரிந்து, மக்களுடன் மக்களாக களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாலாஜி
டிச 25, 2025 19:04

பாஜகவின் பினாமி அடிமை தவெக ஜோசப் விஜய் என அனைவருக்கும் புரிந்துவிட்டது.


panneer selvam
டிச 25, 2025 15:12

Vijay anna , what way you differ from DMK ? You are nothing but another Dravidian Party without any clear policy or ideology


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 25, 2025 15:03

பெரியாரிடமிருந்து கொஞ்சம்.... அண்ணாவிடமிருந்து கொஞ்சம்.. எம்ஜியாரிடமிருந்து கொஞ்சம்... கருணாநிதியிடமிருந்து கொஞ்சம்....இப்படி எல்லோரிடமும் கொள்கையை இரவல் வாங்கி தனக்கென ஒரு கொள்கை இல்லாமல் இருக்கும் இவருக்கு பாஜக கொள்கை எதிரியாம்.....சிரிப்பு அரசியல் தலைவர்....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை