உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்துடைப்புக்காக ஆணையம், குழு அமைத்து வரிப்பணத்தை வீணடிக்கும் ஸ்டாலின்; அண்ணாமலை குற்றச்சாட்டு

கண்துடைப்புக்காக ஆணையம், குழு அமைத்து வரிப்பணத்தை வீணடிக்கும் ஸ்டாலின்; அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர் ஸ்டாலின் வீணடித்துக் கொண்டு இருக்கிறார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021ம் ஆண்டிலிருந்து, 2023ம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில், 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப் படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு. இந்நிலையில், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை, நான்கு ஆண்டுகளாகக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, முதல்வர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதல்வர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்? இது தவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற? பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர் ஸ்டாலின் வீணடித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
அக் 18, 2025 09:06

சீக்கிரம் தனிக்கட்சி ஆரம்பிச்சு முன்னேறுங்க...


Thravisham
அக் 18, 2025 06:42

திருட்டு த்ரவிஷன் டார்கெட் தமிழக அரசின் கடன் 12 லட்சம் கோடி. இவனுங்க மீது வருமான வரித் துறையோ அல்லது அமலாக்கத் துறையோ ஏன் பாய்வதில்லை?


மணிமுருகன்
அக் 17, 2025 23:46

அருமை ஆணையம் விசாரணைக்குழு எல்லாம் வரிப்பண சுரண்டல் அத்தகைய குழுக்களுக்கு தலைமை ஏற்பவர்கள் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல்ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி விஸ்வாசிகளே.நிதியில் உனக்கு பாதி என்ற கொள்கை...


Pandi Muni
அக் 17, 2025 20:35

கருணாநிதியின் வளர்ப்பு அப்படி


duruvasar
அக் 17, 2025 19:25

திமுகாவின் 1001வது வாக்குறுதியை பாருங்கள். ஆண்டு தோறும் ஆணையங்கள் அமைப்போம் என உறுதி பட கூறியிருந்ததை விவரமாக செயல்படுத்துகிறார்.


திகழ்ஓவியன்
அக் 17, 2025 18:54

அண்ணாமலை உண்மையில் எடப்பாடி கிங் தான் உம்மை செல்லா காசு ஆக்கி உமது வாயாலேயே எடப்பாடி தான் அடுத்த முதல்வர் என்று சொல்லவைத்த மாவீரன் அவர் , இன்று தெருவில் நிற்க காரணம் எடுபுடி அண்ட் நிம்மி இருவர் தான் காரணம்


K.n. Dhasarathan
அக் 17, 2025 18:00

அண்ணாமலை ஆணையம் அமைத்து வரி பணம் வீணாகிறதா ? அப்போ காவேரிக்கு ஆணையம் அமைத்தது அந்த ஒன்றிய அரசின் ஏமாற்று வேலையா ? இப்படி செம் சைடு கோல் போடுவது நியாயமா ? உங்களைப்பாடீறி ஒன்றிய அரசு என்ன நினைக்கும் ?


G Mahalingam
அக் 17, 2025 18:24

கடந்த 4.5 ஆண்டு திமுக ஆட்சியில் பல ஆணையம் பல விசாரணை குழு அமைத்தது. ஏதாவது ஒன்று செயல் படுத்தி இருந்தால் சொல்லவும்.


Priyan Vadanad
அக் 17, 2025 16:32

மறந்து போயி ஸ்டாலின் தேர்தல் ஆணையம் நடத்தவில்லையா என்று கேட்டுவிடப்பகிறார்.


vivek
அக் 17, 2025 17:15

ஆனால் எப்பவுமே உனக்கு அதே அலுமினிய தட்டுதான் பிரியன்


Bala C
அக் 17, 2025 16:28

அண்ணாமலை, இப்ப நீங்க டம்மி மலை, ரொம்ப பேசாதீங்க எங்க நைனார் பார்த்துக்குவார்.


lana
அக் 17, 2025 16:25

ஏம்பா mario gst குறைக்க கூடாது அது மாநில நிதி ஐ பாதிக்கும் ன்னு ஒருத்தர் குரைத்தார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை