உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் கைகாட்டுபவரே பிரதமராக வர வேண்டும்

ஸ்டாலின் கைகாட்டுபவரே பிரதமராக வர வேண்டும்

சென்னை: ''முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ, அவரே பிரதமராக வர வேண்டும்; அதற்கு, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி பேசினார்.கடலுார், ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு முன்னிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

சேலத்தில் இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஆனாலும், தி.மு.க.,வின் பணி இன்னும் முடியவில்லை. ஏப்ரல் மாதத்தில், லோக்சபா தேர்தல் நடக்கும் என தெரிகிறது. வரும், 2024 லோக்சபா தேர்தலில், 40க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும்.லோக்சபா தேர்தலுக்கு இன்னும், 60 - 65 நாட்கள் தான் உள்ளன. ராமநாதபுரம், கடலுாரில் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். கடந்த, 2019 லோக்சபா தேர்தலை விட, வரும் தேர்தல் மிக மிக முக்கியம். தமிழக அரசுக்கு நிதி கேட்டால், பா.ஜ., அரசு கொடுக்க மறுக்கிறது. உறுதி சொன்னதைக் கூட கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆனாலும், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை சோதனை வாயிலாக, அ.தி.மு.க.,வை போல தி.மு.க.,வையும், தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, பா.ஜ., நினைக்கிறது; அது ஒருபோதும் நடக்காது.முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமராக வர வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றோம். இப்போது, தி.மு.க., ஆளும்கட்சியாக இருக்கிறது. எனவே, ஒரு சதவீதம் ஓட்டு கூட குறையக்கூடாது. அதனால், கட்சியினர் ஒவ்வொருவரும் தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும். வரும் மூன்று மாதங்களுக்கு, வேறு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, தொண்டர்கள் முழு நேரமும் கட்சிக்காக பணியாற்ற வேண்டும். லோக்சபா தேர்தல் வெற்றி தான், 2026 சட்டசபை தேர்தலுக்கான அடித்தளம். இதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 146 )

vnatarajan
பிப் 05, 2024 16:20

மோடி பிரதம மந்திரியாக வருவது நிச்சயம். அது ஆண்டவன் கட்டளை. பிறகு இவர் யாரை கையை காட்டி என்ன பிரயோஜனம்


Narayanan
பிப் 05, 2024 15:26

மொத்தம் ஐநூற்றி நுப்பதினாலு தொகுதிகள் . இருநூற்றி அறுபது வந்தாலே பிஜேபி ஆட்சிதான். அது வட மாநிலங்களில் எளிதாக கிடைத்துவிடும். தமிழக நாற்பது சீட்டை கொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. வழக்கம் போல தமிழக எம் பிக்கள் பாராளுமன்றத்தில் கையெழுத்தை போட்டுவிட்டு கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு வருவார்கள் . இதில் ஸ்டாலின் கையை காட்டினாலும் கண் காட்டினாலும் ஒன்றும் நடக்காது .போய் பட வேலை இருந்தால் பார்க்கலாம் .


sankar
பிப் 04, 2024 06:34

காமெடி பீசு


meenakshisundaram
பிப் 04, 2024 06:17

அநேகமாக ஸ்டாலின் யாரை காண்பிக்கிறாரோ அவர் கைது செய்யப்படாமலிருந்தாலே போதும்


Anbuselvan
பிப் 02, 2024 19:22

மோடியை நோக்கி கை காட்டுகிறா மாதிரி ஒரு போட்டோ இருக்கு போல இருக்கே


Mohan das GANDHI
பிப் 01, 2024 23:35

முதலில் தெலுங்கர் ஸ்டாலின் திமுக கட்சி இந்த 2024 MP தேர்தலில் ஜெயிக்குமா ? சந்தேகமே? பாஜக திரு.அண்ணாமலை மலை டா மலை IPS பாஜக அதன் கூட்டணிகள் தான் தமிழ்நாட்டில் 35 MP க்களை பெற்று அமோகமாக மத்தியில் பாரத பிரதமர் திரு மோடி ஜி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் அதை ஸ்டாலின் வீட்டிலிலிருந்தவாறு TV யில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் ஸ்டாலின் கையை காட்ட தேவையில்லை விரலை சூண்டவும் தேவையில்லை ஓய்வெடுக்கட்டும்.


Vasu
பிப் 01, 2024 22:18

சின்ன தத்தி பெரிய தத்தி


NicoleThomson
பிப் 01, 2024 21:53

அப்படியே பாகிஸ்தானிலும் எலெக்ஷன் நடக்குது வாரிசு சார் , அங்கேயும் உங்களின் ஆர்டர் பதிவு பண்ணி அனுப்புங்க


g.s,rajan
பிப் 01, 2024 21:53

கைகாட்டுவது திகாரை நோக்கி இருந்துவிடப்போகிறது .....


g.s,rajan
பிப் 01, 2024 21:37

நெனைப்புத்தான் பொழைப்பைக் கெடுக்குது .....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ