உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை படுபாதாளத்துக்கு தள்ளியது தான் ஸ்டாலின் மாடல் சாதனை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

தமிழகத்தை படுபாதாளத்துக்கு தள்ளியது தான் ஸ்டாலின் மாடல் சாதனை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழகத்தை படுபாதாளத்திற்கு தள்ளியது தான் ஸ்டாலின் அரசின் சாதனை,'' என எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், ஸ்டாலின் அரசால் அராஜக போக்குடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 2021 தேர்தலின் போது, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நீங்கள், 'ஆட்சி அமைந்ததும், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை திமுக நிறைவேற்றும்... ஆக' என்று படித்த துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா? சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் அளவிற்கு பகுதி நேர ஆசிரியர்களை இந்த திமுக அரசு தள்ளியிருப்பது வெட்கக்கேடானது.அதே போல, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் பாபு கத்தியால் குத்தப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போதே, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இது ஸ்டாலின் மாடல் அல்லவா? வழக்கம் போல கடந்து சென்றதன் விளைவே இந்த சம்பவம்.அரசு மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை; இதற்கு சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கத் திராணியற்ற முதல்வரே பொறுப்பு! வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, அவர்களை தெருவில் போராட நிறுத்தியதோடு அல்லாமல், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழகத்தை படுபாதாளத்திற்கு தள்ளியது தான் ஸ்டாலின் Failure மாடல் சாதனை!கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்; ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 00:29

அவர் திராவிட மாடல் என்கிறார். இவர் ஸ்டாலின் மாடல் என்கிறார். ரெண்டும் ஒன்னு தான்.


மனிதன்
ஜூலை 08, 2025 22:18

ஆமா இவரு வந்து அப்படியே நெட்டுகுத்தா நிக்க வச்சுருவாரு... சுய புத்தியும், சொல் புத்தியும் இல்லா அடிமை... 2026 ரோடு அதிமுக என்ற கட்சியே இருக்காது..


Vijay D Ratnam
ஜூலை 08, 2025 21:48

நான்கு ஆண்டு காலம் எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக இருந்தார. இப்போது நான்கு ஆண்டு காலமாக ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். இருவரின் ஆட்சியில் எது சிறந்த ஆட்சி என்று மக்கள் நினைக்கிறார்களோ அவருக்கே வாக்களிக்கட்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 08, 2025 19:58

தரையில் தவழும் போது அப்படித் தான் தெரியுமோ?


Kjp
ஜூலை 08, 2025 21:06

இப்படியே கருத்து போட்டு உசுப்பேத்தி விட்டு திமுகவை ரணகளமாக்கி விட்டீர்கள்.


Narayanan Muthu
ஜூலை 08, 2025 19:35

கட்சியை அடமானம் வைத்தது போதாதென்று தமிழகத்தையும் அடமானம் வைக்க துடிப்பது தன்னை ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவா. தமிழகத்தை வடநாட்டன்களுக்கு அடிமை சாசனம் எழுதி தன்னை காப்பாற்றி கொள்ள துடிக்கும் சுயநலவாதிகளுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட தமிழக வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள்.


என்றும் இந்தியன்
ஜூலை 08, 2025 18:29

இ.பி.எஸ். குற்றச்சாட்டு 1000 சதவிகிதம் சரியானது


V RAMASWAMY
ஜூலை 08, 2025 18:26

Absolutely right.


Oviya Vijay
ஜூலை 08, 2025 18:06

இவ்வளவு மோசமாகவும் கேவலமாகவும் கூட ஒரு தேர்தலில் அதிமுகவால் தோற்க முடியமா என்றால் அது 2026 தேர்தலாகத் தான் இருக்கும்... முடிவுகள் வரும் நாளில் அதிமுகவில் பூகம்பமே வெடிக்கும்...


ராஜா
ஜூலை 08, 2025 17:50

அம்மா தந்த “பா ஜா க வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் “ என்று சொன்ன வாக்குறுதியை விட்டுக் கொடுத்து விட்டு எந்த ஆணியையும் புடுங்க வேண்டாம்.


babu
ஜூலை 08, 2025 17:42

அதிமுக தொண்டர்களே உங்களை தோற்கடிப்பார்கள்...


சமீபத்திய செய்தி