உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்டாலின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

 ஸ்டாலின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

சென்னை: தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 'உங்க கனவ சொல்லுங்க' என்ற நிகழ்ச்சி, நேற்று காலை 10:30 மணிக்கு, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நிகழ்ச்சி நடக்கவில்லை. இது குறித்து, செய்தித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசின் 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தின் நிறைவாக, 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இச்செய்தி பெரும்பாலானோரை சென்று சேரவில்லை. எனவே, நேற்று நடக்கவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
மார் 04, 2026 08:22

தூங்கினால்தானே கனவு வரும் தூக்கமே இல்லைஅதனாலேயே மனக்குழப்பத்தில் இருக்கும்போது உங்கள் கனவை சொல்லுங்க திட்டம் நிறைவேற்றப்படும் என்றால் எண்ணாத்தே சொல்வது ஒன்றுமே புரியவில்லையே முதலில் மக்களை நன்றாக தூங்க விடுங்கள் பிறகு கனவைப்பற்றி கேட்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை