மேலும் செய்திகள்
மாநில ஜூனியர் கூடைப்பந்து 41 அணிகள் பலப்பரீசை
08-Jun-2025
சென்னை, தமிழ்நாடு கால்பந்து அமைப்பு, திண்டுக்கல் கால்பந்து சங்கம் சார்பில், மகளிருக்கான மாநில டி.ஆர்.ஜெ., கோப்பைக்கான கால்பந்து போட்டி, திண்டுக்கல் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது.இதில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை உட்பட 19 அணிகள் போட்டியிடுகின்றன. இதன் 'ஏ' பிரிவில் இடம் பிடித்த சென்னை அணி, நெல்லை, சேலம், ராமநாதபுரம், ஊட்டி, விருதுநகர் உட்பட ஒன்பது அணிகளோடு மோதுகிறது.நேற்று மாலை நடந்த முதல் போட்டியில், சென்னை அணி, 4 - 0 என்ற கோல் கணக்கில் நீலகிரி அணியை வீழ்த்தியது.சென்னை அணிக்காக சுஜீதா இரண்டு கோல் அடித்து அசத்தினார். ஜமீலா மற்றும் திவ்யா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அடுத்து நடந்த போட்டியில் நாமக்கல் அணி, மதுரை அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
08-Jun-2025