உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருட்டு, புரட்டு, உருட்டு: ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் சீமான் பாய்ச்சல்!

திருட்டு, புரட்டு, உருட்டு: ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் சீமான் பாய்ச்சல்!

ஈரோடு: 'தி.மு.க., என்றாலே, திருட்டு, புரட்டு, அதை காப்பாற்ற செய்வதற்கு உருட்டு. இதை தான் அவர்கள் திரும்ப திரும்ப செய்து கொண்டு இருப்பார்கள்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமிக்கு ஆதரவாக, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p73hthuu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அவர் பேசியதாவது: நீண்ட காலமாக தமிழர் தாய் நிலத்தில், தமிழ் மக்களின் ஓட்டை பெற்று, அரசியல் வலிமை பெற்று, பதவியை பெற்று ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் தி.மு.க., மாநில உரிமை, மாநில தன்னாட்சி உட்பட மக்களின் எந்த அடிப்படை உரிமையும் பாதுகாக்கவில்லை.

வெற்று முழக்கம்

குறிப்பாக கல்வியை மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க., தான் கல்வியின் உரிமையை மத்திய அரசு பறித்து செல்லும் போது ஆட்சியில் இருந்தது. இன்றைக்கு கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்று வெற்று முழக்கத்தை விடுவது எவ்வளவு வேடிக்கையானது. ஒவ்வொரு உரிமையும் மத்திய அரசுக்கு தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க., தான். பேரிடர் காலத்தின் போது கூட உரிய நீதியை பெற முடியவில்லை.

கடல் தூரம்

கச்சத்தீவை எடுத்து கொண்டு போகும் போது இங்கு அதிகாரத்தில் இருந்தது தி.மு.க., தான். இன்று வரை ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளிலும் கச்சத்தீவை மீட்க போராடுவோம் என வார்த்தைகளை பதிவு செய்கிறார்கள். ஆனால் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கச்சத்தீவு நமக்கு என்று இருந்தால் கடல் தூரம் அதிகம். நமது மக்களை பாதுக்க ஒரு நடவடிக்கையும் இல்லை. நமது நிலத்தில் இருந்து எடுக்கப்படும் வளங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

ஒரு சொட்டு தண்ணீர்!

இதனை தமிழர்கள் சகித்து கொண்டு வருவதால் ஏற்படும் விளைவு, ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு தர முடியாது என கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் சொல்கிறார். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மறுக்கும் காங்கிரசின் வெற்றிக்கு, இந்த நாட்டில் இருக்கும் தி.மு.க., தலைவர்கள் ஓட்டு கேட்பதில் சிக்கல் இல்லை. ஆனால் தமிழக மக்களின் ஓட்டுக்களை பெற்று அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் காங்கிரசிற்கு ஓட்டளிக்குமாறு கூறுவது எவ்வளவு பெரிய கொடுமை.

துணிவு இல்லை

ஒரு தண்ணீர் தமிழகத்திற்கு தர முடியாது என்று சொல்கிற போது, உன்னோட கூட்டணி இல்லை ஒரு சீட்டும் இல்லை என்று வெளியேறி வர ஏன் இவர்களுக்கு துணிவு இல்லை. 450 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து கொண்டு இருந்தது. 150 டி.எம்.சி தண்ணீருக்கு முட்டிக்கால் போட்டு, மண்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் என்றால் அங்கு வாழும் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள். இதனை கேட்பதற்கு யாரும் இல்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது யார் காங்கிரஸ். இதற்கு கூட இருந்து ஒப்புதல் அளித்தது தி.மு.க., கடைசியாக செயல்படுத்தியது பா.ஜ.,

நீட் தேர்வு ரகசியம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்று வாக்குறுதி தந்துவிட்டு, தற்போது எங்களால் முடியாது, இண்டியா கூட்டணி வெற்றி பெற்று இருந்தால், நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்கிறார்கள். இதனை அன்றைக்கே சொல்லியிருக்க வேண்டியது தானே? எங்களால் முடியாது, ஒரு வேளை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து இருக்க வேண்டியது தான். ரகசியம் திட்டம் இருக்கிறது என்று சொன்னது இவர்கள் தான்.

வெற்று வாக்குறுதிகள்!

வெற்று அறிக்கைகள், வெற்று தீர்மானங்கள், வெற்று வாக்குறுதிகள் அவ்வளவும் ஏமாற்று. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது துணை முதல்வர் உதயநிதி. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தள்ளுபடி செய்தார்களா? ஒன்றில் கூட உண்மையில்லை. தி.மு.க., என்றாலே, திருட்டு, புரட்டு, அதை காப்பாற்ற செய்வதற்கு உருட்டு. இதை தான் அவர்கள் திரும்ப திரும்ப செய்து கொண்டு இருப்பார்கள். ஆட்சிக்கு வந்தால் மது கடைகளை மூடுவோம் என முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கூறினார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் மூடவில்லை என்று கேட்டால் வாய்களை மூடுவோம், இது தான் அவர்களின் கோட்பாடு. இதுதான் அவர்களின் நிலைப்பாடு. இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Narayanan Muthu
ஜன 25, 2025 19:27

இவர் ஒரு உதவாக்கரை. விழலுக்கிறைத்த நீர் என்பதை தேர்தல் முடிவில் தெரிய வரும்.


முருகன்
ஜன 25, 2025 19:02

ஈரோடு மக்கள் அறிவாளிகள் இவருக்கு தேர்தலில் தோல்வி உறுதி


Sundar R
ஜன 25, 2025 17:25

In Erode, Seeman will incinerate the DMK like the mud being baked in fire. Everyone is very eager to know the result.


ஆரூர் ரங்
ஜன 25, 2025 16:58

சுப்ரீம் கோர்ட் தந்த அழுத்தத்தால் தான் நீட் கட்டாயமாக ஆக்கப்பட்டது. நியாயமான சட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் திமுக கூட்டணி இதனை எதிர்க்கக் கூடாது..பெருமைப்படவேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஜன 25, 2025 16:38

திருட்டு, சுருட்டு, புரட்டு, உருட்டு திமுகவின் அடிப்படை கொள்கைகள்


Palanisamy Sekar
ஜன 25, 2025 15:40

சீமான் பேசுவதை தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பொதுமக்களும் நன்கு அறிவார்கள் என்றாலும். திமுக கொடுக்கும் பணத்துக்கு ஓசி பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஆசைப்பட்டு திமுகவுக்கு வாக்களித்தார்கள். இனியும் அவர்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை ஈரோடு வாக்கு எண்ணிக்கையில் ஓரளவுக்கு எதிர்பார்க்கலாம். எதிர்க்கட்சிகள் யாருமே போட்டியிடாத காரணத்தால் திருட்டு ஓட்டுக்கு திமுகவுக்கு சொல்லி தரவேண்டியதே இல்லை. அதனால் ஓரளவு வாக்கு எண்ணிக்கை கூடக்கூடும். திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். சீமானின் முயற்சியை நிச்சயம் பாராட்டலாம். துணிச்சல்காரர் என்பதையும் ஒப்புக்கொள்ளலாம்.


முக்கிய வீடியோ