உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடலூர், எண்ணூர், சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (அக்.,17) அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கிறது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலூர், சென்னை, எண்ணூர் உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் படகுகளை துறைமுகங்கள் மற்றும் கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு காரணமாக, கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijay D Ratnam
அக் 16, 2024 13:37

தமிழகத்தில் காட்டுப்பள்ளி, எண்ணூர், சென்னை, காரைக்கால், தூத்துக்குடி என்று ஐந்து துறைமுகங்கள் செயல்படுகிறது என்பது தெரியும். அதுசரி பாம்பன், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரியில் எங்கேப்பா துறைமுகம் இருக்கிறது. மீன்பிடித்துறைமுகம் என்றால் கூட ஏகப்பட்டது இருக்கே. ஒருவேளை புயல்கூண்டு ஏற்றுவதற்காக துறைமுகமோ.


சமீபத்திய செய்தி