உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடமை தவறினால் கடுமையான நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

கடமை தவறினால் கடுமையான நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்'' என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், 29, மரணம் அடைந்தார். இது தமிழகத்தில் விவாத பொருளாகி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், அவரை தாக்கியதாக போலீசார் ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ் குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹர்ஷ் தக்கர், போலீஸ் துறை இயக்குநர்(நிர்வாகம்) வெங்கட்ரமன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், போலீசாரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.https://x.com/mkstalin/status/1939667813272260998போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Ramalingam Shanmugam
ஜூலை 07, 2025 18:13

ஒருவர் அழுவார் ஒருவர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்


panneer selvam
ஜூலை 06, 2025 22:42

Empty dialogue . Unless Stalin ji stops the interference of local DMK functionaries , Police could not do anything good for the people .


Padmasridharan
ஜூலை 02, 2025 07:45

ஒருத்தர் செத்தாதான் காவல்துறை கடமையை தவறிட்டாங்கனு இல்ல... கடற்கரை போன்ற பொது இடங்களில் மக்களை ஒருமையில் பேசி அதட்டி மிரட்டி வண்டியில் கூட்டி அழைத்து அறைக்கு செல்கின்றனர். பஞ்சாயத்து என்ற பெயரில் பணத்தை கேட்டு வாங்கி பல குற்றங்களை மறைத்து குற்றவாளிகளுக்கு வித்திடுவதே இவங்கதான். அது அவங்களுக்கே தெரியும்.


சிட்டுக்குருவி
ஜூலை 01, 2025 18:24

குருவித்தளையில் பணங்காய் வைத்தமாதிரி தகுதி இல்லாதவருக்கெல்லாம் பதவி கொடுத்தால் இதைத்தான் மக்கள் சந்திக்கநேரிடும் .தன் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் உடனே நடவடிக்கையில் என்பது . ஒருவருக்கு பொறுப்பு என்று கொடுத்து விட்டால் எல்லாம் முடிந்ததாக நினைக்கக்கூடாது .அந்தப்பொறுப்பு சரியாக நிறைவேறுகிறதா என்பதை பார்ப்பதும் தன் பொறுப்புதான் .


Rajasekar Jayaraman
ஜூலை 01, 2025 15:35

தாண்டிக்கப்பட வேண்டியவர் அவரதான்.


c.mohanraj raj
ஜூலை 01, 2025 12:14

அப்பப்ப இப்படித்தான் காமெடி பண்ணும்


ராமகிருஷ்ணன்
ஜூலை 01, 2025 11:39

போலீஸ் வாங்கும் லஞ்சம் பெரும் பகுதி தலமைக்குடும்பத்துக்கு தான் போகுது. அதனால போலீஸின் தவறுகள் மென்மையாக தண்டிக்கப்படுவார்கள்


அப்பாவி
ஜூலை 01, 2025 10:06

ஜிவால் சார் வீட்டுக்கு போற வரைக்கும் சிரிச்சிக்கிட்டே போயிருப்பாரு


suresh Sridharan
ஜூலை 01, 2025 08:12

பயந்துட்டேன் அப்பா சொன்னத கேட்டது


பாரத புதல்வன்
ஜூலை 01, 2025 07:58

வார்த்தை ஜாம்பங்களை ஒதுக்கி விட்டு மக்கள் ஆளுமை கொண்ட மனிதரை, சுய சிந்தை உள்ளவரை வரும் 2026 ல் தேர்ந்தெடுத்தால் இது போன்ற குற்றங்கள் குறையும்.... தீர்வாக அமையும்.


புதிய வீடியோ