உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாம்: மழையின் அளவும் அதிகரிக்குமாம்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாம்: மழையின் அளவும் அதிகரிக்குமாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என, தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: தென் மேற்கு கடலில் நிலை கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கே, சுமார் 490 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம், அக்டோபர் 17ம் தேதி காலை, புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே, 35 - 55 கி.மீ., வேகத்தில் கரையை கடக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும். நேரம் செல்லச் செல்ல, மழையின் அளவும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை