உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 1 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பிளஸ் 1 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடை அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன்-. இவரது இளைய மகன் யோகபாபு 17. இவர் அம்மையநாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பில் வணிகவியல் பிரிவில் படித்தார்.நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 1 பொது தேர்வு முடிவில் வணிகவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார்.இதனால் விரக்தியடைந்த யோகபாபு நேற்று முன் தினம் மாலை கொடைரோடு அருகே சென்னை - மதுரை தேஜஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கொடைரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 18, 2025 12:37

வரும் தேர்தலில் திராவிட மாடல் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இந்த தேர்வை ரத்து செய்வது தான்.. எந்த தேர்வெழுதி இறந்தாலும் கழக ஆட்சியில் அந்த தேர்வு ரத்து செய்யப்பட சட்ட சபையில் மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே அது சட்டமாக்கப்படும் என்பதை ஜனாதிபதி, ஆளுநர், பிரதமர மற்றும் அமித்ஷாவிற்கு தெரிவித்து கொள்கிறோம்....!!!


சூரியா
மே 18, 2025 07:22

இந்தத் தேர்வை நிறுத்த எப்பொழுது போராட்டம் ஆரம்பிக்கலாம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை