உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம்: அதிர்ஷ்டவசமாக தப்பிய 20 குழந்தைகள்

மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம்: அதிர்ஷ்டவசமாக தப்பிய 20 குழந்தைகள்

சென்னை: மின்சாரம் பாய்ந்து பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், 20 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள், 'பகீர்' தகவல் தெரிவித்துள்ளனர்.திருவொற்றியூர், தாங்கல் பீர்பயில்வான் தர்கா, 2வது தெருவைச் சேர்ந்தவர் அல்தாப். அவரது மகன் நவ்பல், 17; பிளஸ் மாணவர். இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, டியூஷன் முடிந்து வீடு திரும்பினார். அப்போது, கனமழை காரணமாக, வீட்டு வாசலில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது.தேங்கிய மழைநீரில் இருந்து மின்சாரம் பாய்ந்து, நவ்பல் சுருண்டு விழுந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஊர் நிர்வாகி துராபுதீன் என்பவர் ஓடி வந்து, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரையும் மின்சாரம் தாக்கியதால் சுதாரித்தவர், பிளாஸ்டிக் குழாயால் சிறுவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி மீட்டுள்ளார்.ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், நவ்பல் உயிரிழந்தார். இதற்கு காரணமான, மின்வாரியத்தை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், நள்ளிரவில் மறியல் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.ஸ்டேஷன் முற்றுகைஇதற்கிடையில், நேற்று காலை, திருவொற்றியூர் காவல் நிலையம் முன் திரண்ட, நவ்பலின் உறவினர்கள், 300க்கும் மேற்பட்டோர், சாலையை சீரமைத்த மாநகராட்சி, மின் வடத்தை சரி செய்யாத மின்வாரியத்தின் அலட்சியத்தால் தான், இந்த விபத்து நிகழ்ந்தாக கூறி முற்றுகையிட்டனர்.அதே சமயம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை - தாங்கல் பேருந்து நிறுத்தம் சந்திப்பில், பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த, திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மாணவனின் குடும்பத்திற்கு, ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். விபத்து நடந்த இடமருகே, குரான் படிக்கும் பயிற்சி பள்ளி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு பயின்று வருகின்றனர். கனமழை காரணமாக, குழந்தைகள் அங்கிருந்து வெளியே வராததால், அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.https://x.com/dinamalarweb/status/1941037796938207242நவ்பலை பார்க்கவில்லைதொடர் மழையால், தாழ்வாக இருக்கும் எங்கள் வீட்டில் மழைநீர் தேக்கம் இருந்தது. அப்போது, விபத்து நடந்த பகுதியில் மின்கசிவு ஏற்படுவதாக, அவ்வழியே வந்தவர் தெரிவித்தார். அதன் காரணமாக, என் பிள்ளை உட்பட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பயிற்சி பள்ளியில் இருந்து யாரும் வெளியே வராமல் கவனித்துக் கொண்டிருந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் தான், நவ்பல் அவ்வழியே சென்று விபத்தில் சிக்கினார். அவர் அந்த பக்கம் சென்றது பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்போம்.தவ்லத், 32; இல்லதரசி, தாங்கல், திருவொற்றியூர்.மின்வாரியத்தினர் போன் எடுக்கவில்லைமின்சாரம் தாக்கி சிறுவன் சுருண்டு விழுந்திருப்பதாக, பகுதிமக்கள் கூறினர். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று, அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், என்னுடன் மீட்பு பணியில் ஈடுபட்டவருக்கும் மின்சாரம் தாக்கியது. பின், வேறு வழியின்றி பிளாஸ்டிக் குழாயால் சிறுவனை மெல்ல நகர்த்தி மீட்டோம். மின்கசிவு குறித்து, பலமுறை மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். சம்பவத்தன்று யாரும் போனை எடுக்கவில்லை.ஏ. துராபுதீன், 48, தாங்கல் குடியிருப்போர் சங்க நிர்வாகி.நடவடிக்கை தேவைதிருவொற்றியூர், தாங்கல் பீர் பயில்வான் தெருவைச் சேர்ந்த அல்தாப்பின் மகன் நவ்பல், 17, தேங்கி கிடந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். அதற்கு முன், அதே பகுதியில், மழைநீர் வடிகால் சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன், சின்ன குருசாமி ஆகியோர் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு உயிர் தப்பினர். அப்போதாவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மின் வாரியம் எடுத்திருந்தால், நவ்பல் உயிர் பறிபோயிருக்காது.இந்த விவகாரத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கான காரணம். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் வழங்குவதுடன், அலட்சியமாக செயல்பட்ட மற்றும் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாம் தமிழர் கட்சி, சீமான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

KumaR
ஜூலை 04, 2025 16:04

திருட்டு திராவிட விளங்காத சொரியான் ஆட்சிக்கு முட்டு குடுக்கும் ஓவிய ஆல காணும்.. ஒருவேளை இன்னைக்கு இரநூறு வரல போல..


SUBRAMANIAN P
ஜூலை 04, 2025 13:32

எல்லா இடத்துலயும் இதுபோன்ற குறைகள் இருக்கத்தான் செய்யும். பணம் குடுத்தா சரியாப்போச்சு. இதுதான் திராவிடமாடல் என்பது தெரியாதா.. பணம் குடுத்து வேலை வாங்குவது.. பணம் குடுத்து தீர்ப்பு வாங்குவது. பணம் குடுத்து ஓட்டு வாங்குவது. பணம் குடுத்து கூட்டம் சேர்ப்பது எல்லாமே டிராவிட மாடல்ல வருது.. இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ.. முதல் ஐந்து வருஷத்துக்கே இப்படி வீக்காயிட்டீங்க.. அடுத்த ஐந்து வருட திமுக ஆட்சியில எல்லாரும் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடிருவீங்க போலயே.. இருக்கு..


Krishnamurthy Venkatesan
ஜூலை 04, 2025 12:25

தனியார் கம்பெனிகளின் கேபிள் வயர்கள், இன்டர்நெட் வயர்கள் அனைத்தும் மின் கம்பங்களிலும், மின் வயர்கள் மீதும், பல வீட்டின் மொட்டை மாடியையும் ஆக்கிரமித்துள்ளன. அதுமட்டுமில்லாமல் சில விளம்பர போர்டுகளும் மின் கம்பங்கள் மீது காணப்படுகின்றன. மின் வாரியம் வாரம்/இரெண்டு வாரங்கள் ஒருமுறை maintenance என சொல்லி மின் விநியோகம் நிறுத்துகிறார்கள், ஆனால் என்ன மைண்டெனன்ஸ் செய்தார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். சரியான முறையில் பராமரித்திருந்தால் இந்த விபத்து நடை பெற்றிருக்காது. பல அரசு ஊழியர்கள் நேர்மையாக இருப்பதில்லை. மக்கள், இவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்த பின்னும் மின் வாரியம் தவறை சரி செய்யவில்லை. இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரையும் பொறுப்பற்ற முறையில் கவனக்குறைவுடன் வேலை செய்ததாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.


Ramesh Sargam
ஜூலை 04, 2025 12:23

தமிழகத்தில் இப்படி தொடர்ந்து பரிதாப மரணங்கள். முதல்வர் எங்கு பேசினாலும், நாங்கள் சொல்லாததையும் செய்தோம் என்று தற்பெருமை பேசி காலத்தை ஓட்டுகிறாரே தவிர, இதுபோன்ற அவலங்கள் ஏற்படாமல் இருக்க எந்தவித ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதில் 2026, 2031, 2036 ஆண்டுகளில் கூட திமுக ஆட்சிதான் என்று கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.


Padmasridharan
ஜூலை 04, 2025 11:24

எல்லாரும் அவங்கவங்க வேலைய சரியா செஞ்சாங்கன்னா நிறைய குற்றங்களை தடுக்கலாம். ஆனால் அரசு வேலை செய்பவர்கள் சம்பளத்துடன் மாமூல் பணத்திற்காகவே வேலைகளை சரிவர செய்வதில்லை. இதனால் தன் வருமானத்தை மட்டுமே நினைக்கும் இந்த மாதிரி மின்சார ஊழியர்கள், மற்றவர்களும் மக்களுக்கு பல இன்னல்களை உருவாக்கிவிடுகின்றனர்.


Tiruchanur
ஜூலை 04, 2025 11:13

எவ்வளவு ஒற்றுமையா போராடறாங்க பாருங்க. ஹிந்துக்கள் அவங்க கிட்டேர்ந்து இந்த ஒற்றுமையை கத்துக்கணும்


Bahurudeen Ali Ahamed
ஜூலை 05, 2025 10:49

அய்யா இந்த துக்கத்திலுமா உங்களுக்கு அரசியல் வேண்டியிருக்கிறது?வேண்டாம், யார் வீட்டு குழந்தையாக இருந்தாலும் நலமாக இருக்கட்டும், அஜாக்கிரதையாக செயல்பட்ட மின்வாரியத்தை அனைவரும் சேர்ந்து கண்டிப்போம் இனியொரு குழந்தை உயிர் போகாமல் பாதுகாப்போம்


Kundalakesi
ஜூலை 04, 2025 10:59

சாலையில் நடந்து செல்ல பாதுகாப்பு இல்லை. இதான் உங்கள் வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு . இனியொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க விதி மற்றும் தண்டனை கடுமையாக்க பட வேண்டும்


Ganapathy Subramanian
ஜூலை 04, 2025 10:55

முதல்வரிடம் இருந்து சாரி என்று போன் வரும். ஏனென்றால் போன உயிர் சிறுபான்மையினருடையது, தேர்தல் வரப்போகிறது. விலை போன ஊடகங்கள் இன்று எடப்படியார் அல்லது அண்ணாமலையார் என்ன பேசினார், அதனால் அந்த கூட்டணியில் ஏதும் தாக்கம் இருக்குமா என்று விவாதித்து விட்டு கவர் வாங்கிக்கொண்டு நாளை போக்குவர்.


vadivelu
ஜூலை 04, 2025 16:10

ஒருவருக்கு அரசு வேலை, சில லட்சங்கள் நிவாரணம், சாரி கேட்பது எல்லாம் இதை சரி செய்து விடுமா ..


sridhar
ஜூலை 04, 2025 10:33

ஆக , கவலை படாதீங்க. ஆக , தைரியமா இருங்க . ஆக , ஆக …தமிழகம் நாசமா போக .


நாஞ்சில் நாடோடி
ஜூலை 04, 2025 10:06

திமுக அரசு சிறுபான்மை மக்களின் காவலனாம்...


சமீபத்திய செய்தி