உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவி பாலியல் வன்முறை வழக்கு விசாரணை குழு டி.எஸ்.பி., ராஜினாமா

மாணவி பாலியல் வன்முறை வழக்கு விசாரணை குழு டி.எஸ்.பி., ராஜினாமா

சென்னை:சென்னை அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கை விசாரித்து வரும், சிறப்பு புலனாய்வு குழுவில் பணிபுரிந்த, சைபர் குற்றப்பிரிவு, டி.எஸ்.பி., ராகவேந்திரா கே.ரவி, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டது தொடர்பாக, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேள்வி எழுந்தது

அவர் மாணவியிடம், 'சார்' ஒருவருடன் இருக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, 'யார் அந்த சார்' என்ற கேள்வி எழுந்தது.இவ்வழக்கு குறித்து விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துஉள்ளது. இந்தக் குழுவிற்கு உதவியாக, சென்னை அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில், டி.எஸ்.பி.,யாக பணிபுரியும் ராகவேந்திரா கே.ரவி, 45, செயல்பட்டு வந்தார். அவர், 'சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள உயர் அதிகாரிகள் தன்னை சுதந்திரமாக பணி செய்ய விடாமல், கடுமையாக நடந்து கொண்டனர். அதனால், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பணியில் இருந்து விலகுகிறேன்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

'குரூப் - 1' தேர்ச்சி

மேலும், தன் குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக, டி.எஸ்.பி., பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. ராகவேந்திரா கே.ரவி, சென்னையைச் சேர்ந்தவர். சென்னை பல்கலையில் இளங்கலை கணினி அறிவியல் படித்தார். ஜெர்மனியில் உள்ள பல்கலையில், அதே பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று, அங்கேயே பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு, அமெரிக்காவில் கணினி மென்பொறியாளராக மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்தார். கடந்த 2010ல் சென்னை திரும்பினார். டில்லி சென்று ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வந்தார். அதன்பிறகு, சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். 2018ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய 'குரூப் - 1' தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக காவல் துறையில் டி.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தார். அவர் திடீரென, மாணவி பாலியல் வன்முறை வழக்கு விசாரணை குழு பணியில் இருந்து விலகியது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rasaa
ஜன 31, 2025 12:54

உங்களின் நேர்மைக்கு, துணிச்சலுக்கு பாராட்டுக்கள். தன்மானம் உள்ளவர்கள் செய்யவேண்டியதை செய்துள்ளீர்கள். இறைவன் உங்களுக்கு அனைத்து நலன்களையும் தருவான். மனம் தளர வேண்டாம்.


Anantharaman Srinivasan
ஜன 31, 2025 12:48

விசாரணை குழு எப்படி முடிவெடுத்தாலும் இறுதியில் ஞானசேகரன் நிரபராதி என்று அறிக்கை வரணும் என்று வற்புறுத்தியிருப்பாங்களோ..??


Karuthu kirukkan
ஜன 31, 2025 09:16

ஆட்சியாளர்களிடம் அடிமையாக வேலை செய்யாமால் , தன்மானம் காத்து பதவி விலகியது சிறப்பு, நியாயம் , நேர்மை , போன்ற பண்பாளர்களை , கர்மா என்றும் காத்து நிற்க்கும்


VENKATASUBRAMANIAN
ஜன 31, 2025 07:52

அவருக்கு என்ன நெருக்கடி கொடுத்தார்கள் ஓ. திமுக ஆட்சியில் சுதந்திரமாக வேலை செய்ய முடியாது. இதுதான் திராவிட மாடல்


Bhaskaran
ஜன 31, 2025 06:12

அந்த சார் குடும்பத்தில் இருந்து கடுமையான அழுத்தம் வந்திருக்கும்


Ramana Ramana
ஜன 31, 2025 05:57

வதந்திகளின் பிறப்பிடம்.......


புதிய வீடியோ