உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளில் மாணவர்களுக்கு "பிசியோதெரபி மருத்துவ முகாம்

பள்ளிகளில் மாணவர்களுக்கு "பிசியோதெரபி மருத்துவ முகாம்

சிவகங்கை : அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஜூலை 27) இலவசமாக 'பிசியோதெரபி' மருத்துவ முகாம் நடத்துமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், அ.தி.மு.க., அரசிலும் தொடரும் என முதல்வர் ஜெ., தெரிவித்தார். அதன்படி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கை, கால்களின் நிலையை கண்டறிந்து, முன்கூட்டியே மாற்றுத்திறனாளிகள் உருவாகாமல் தடுக்கும் நோக்கில், 'இலவச மருத்துவ முகாம்' நடத்தும் திட்டத்தை முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, நாளை (ஜூலை 27) அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் (பிசியோதெரபி சிகிச்சை) நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்