உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலம்ப மாஸ்டருக்கு மாணவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி: வீடியோ இணையத்தில் வைரல்

சிலம்ப மாஸ்டருக்கு மாணவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி: வீடியோ இணையத்தில் வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், உயிரிழந்த சிலம்ப மாஸ்டருக்கு, அவரது மாணவர்கள் கதறி அழுதபடி சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய காட்சி, காண்பவர் கண்களை குளமாக்கியது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகணேசன். இவர் திருமயம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e6f1gt4x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கபடி வீரரான இவர், கபடி போட்டியில் விளையாடிய போது கையில் அடிபட்டது. உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு மீண்டும் கபடி போட்டியில் விளையாட சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இன்று ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் திருமயம் தாலுகா அலுவலகம் எதிரே அவர் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.அப்போது அவரிடம் சிலம்பம் கற்றுக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கதறி அழுதனர்.அழுது கொண்டே சிலம்பம் சுற்றி குருவுக்கு அஞ்சலி செலுத்தினர். காண்பவர் கண்களை குளமாக்கிய இந்த காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Laddoo
பிப் 25, 2025 07:03

கண்ணீரஞ்சலி. பிரமிக்க வைக்கிறது. ரிப்


தமிழ்ச்செல்வன் பிரான்ஸ்
பிப் 24, 2025 23:34

கண்ணீர் அஞ்சலி வாழ்க மாணவர்கள் வாழ்க அவர் கலை


Ramesh Sargam
பிப் 24, 2025 22:03

ஒருவரின் உயிர் போனபிறகு இந்த மதிப்பு கிடைக்கவேண்டும். சென்னையில் ஒரு அரசியல் தலைவர் இறந்தபோது புதைக்க இடம் தேடி அலைந்தார்கள். அப்படி இருக்கக்கூடாது.


seshadri
பிப் 25, 2025 00:48

புதைக்க இடம் தேடி அலையவில்லை; மிரட்டி பிச்ச்சை எடுத்தார்கள்


theruvasagan
பிப் 24, 2025 21:53

இந்து தர்மம்தான் பெற்றோருக்கு பிறகு குரு அதற்கு பிறகுதான் தெய்வம் என்கிற உன்னத ஸ்தானத்தை குருவுக்கு தந்துள்ளது. குரு பக்தி என்பது தெய்வ பக்தி பித்ரு பக்திக்கு.நிகரானது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.


சமீபத்திய செய்தி