உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதை கற்கக்கூடாது என்பதை மாணவர்களுக்கு கற்றுத்தரணும்

எதை கற்கக்கூடாது என்பதை மாணவர்களுக்கு கற்றுத்தரணும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “சிறந்த பள்ளி என்ற பெயர், தரமான உட்கட்டமைப்பு மட்டுமே நல்ல கல்வியை கொடுக்காது; நல்ல ஆசிரியர்களின் உழைப்பும் முக்கியம். மாணவர்கள் எதை கற்க வேண்டும்; எதை கற்கக் கூடாது என்பதை, ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும்,” என. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.நெருக்கமானதுசென்னை கிண்டியில், நேற்று நடந்த அகர்வால் கல்வி அறக்கட்டளை பொன்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:கல்வி என்பது என் மனதுக்கு என்றும் நெருக்கமானது. அத்தகைய கல்விதான் ஒருவருக்கு சாலச்சிறந்த பரிசு.கல்வி ஒருவரை எப்படி உயர்த்தும் என்பதை பார்த்தவன் நான். என் வாழ்க்கை, கல்வியை விட சிறந்தது வேறு எதுவுமில்லை என்பதை உணர்த்தியது.நான் வளர்ந்த கிராமத்தில் ஆரம்பப் பள்ளி மட்டுமே இருந்தது. உயர்கல்விக்காக, 6 கி.மீ., வெறுங்காலில் நடந்து செல்ல வேண்டும். அப்படி செல்லும் போதுதான், நன்கு படித்து சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்தேன். கல்வியில் சிறந்து, சில ஆண்டுகளாக நாம் முன்னேற்றங்களை அடைந்து வருகிறோம். பொருளாதாரம், மரபியல், ரோபோடீக்ஸ் ஆகியவற்றின் தரத்தை உயர்த்துவதிலும், நாம் கவனம் செலுத்த வேண்டும்.நம் மக்கள் தொகையில், 24 சதவீதம் பேர், 14 வயது; 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் கையில் தான், நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு உள்ளது. நம் மாணவர்கள் மனப்பாடம் செய்து கற்பதைவிட, ஏன், ஏதற்கு என்று கேள்வி எழுப்பக் கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதை உருவாக்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு. பாடம் கற்பித்தலில் நவீன கல்வி முறை, டிஜிட்டல் தொழில் முறை உள்ளிட்டவற்றை, மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.சிறந்த பள்ளி என்ற பெயர், தரமான உட்கட்டமைப்பு மட்டுமே நல்ல கல்வியை கொடுக்காது. அதற்கு நல்ல ஆசிரியர்களின் உழைப்பும் முக்கியம்.எதிர்பார்க்கின்றனவருங்காலத்தில் மாணவர்களுக்கு எதை கற்க வேண்டும்; எதை கற்கக்கூடாது என்பதை கற்றுத்தர வேண்டும். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நம் மாணவர்களால் மட்டுமே முடியும்.உலக நாடுகள் இன்று, இந்தியாவிடம் இருந்து பலவற்றை எதிர்பார்க்கின்றன. வளர்ந்த நாடுகளில், மக்கள் தொகை முதுமையடைந்து வரும் நிலையில், உலகெங்கும் திறமை உள்ளவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
செப் 28, 2024 06:57

அப்படியே சாராயம், கஞ்சா தொழில் செய்பவர்களின் கட்சிகளுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்றும் சொல்லி இருக்கலாம்.


J.Isaac
செப் 28, 2024 08:46

சாராயம் குடிக்க கூடாது, கஞ்சா, பான் பராக், போதை பீடாக்கள், கணேஷ் ஹன்ஸ் , போதை பொருட்கள் உபயோகிக்க கூடாது , போலி பொருட்கள், போலி மருந்துகள் தயாரிக்க கூடாது என அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு போதனை கொடுங்கள். மக்கள் திருந்தினால் கஞ்சா சாராயம் தொழில் நஷ்டம் அடையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை