வாசகர்கள் கருத்துகள் ( 36 )
கர்நாடகாவில் உள்ளதை போல தமிழ்நாட்டின் பெண்களுக்கு மட்டுமே என்று இருக்க வேண்டும்.. மற்ற மாநில பெண்கள் தொகை செலுத்தியே பயணிக்க வேண்டும்... அதிகப்படியான வட இந்தியர்களின் குடியேற்றத்தை இது ஊக்குவிக்கிறது .. பொதுவாகவே இந்த இலவசம் தேவை இல்லாத ஒன்று... பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள் மற்றும் வயது மூப்பு கொண்டவர்களுக்கு மட்டுமே இது தேவை..
தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மாநிலப் பெண்களுக்கும் பொருந்தும் விதத்திலேயே இலவச பேருந்து பயணம் இருக்க வேண்டும். இங்கு வசிக்கும் வெளி மாநில பெண்களை டிக்கெட் எடுக்க சொன்னால் மட்டும் போக்குவரத்து கழகம் அப்படியே லாபத்தை ஈட்டி தள்ளி விடுமா?
எந்த மாநிலத்தவராக இருந்தால் என்ன? அனைவரும் சமம். த.வே.க ஒரு தொலை தூர பார்வை கொண்ட தேசிய கட்சி. தமிழ் நாட்டில் இயங்கும் பேரூந்துகள் தமிழக மகளிர்க்கு மட்டும் இலவசம் என்று கூறி, சுருக்கிக்கொள்ள முடியாது. மேலும் தங்களது யோசனையானது, நடைமுறை சிக்கலையும், பிரிவினைவாதத்தையும் தூண்டி விடும். பேரூந்து நடத்துனர், ஒவ்வொரு மகளிரையும், "தாங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவரா?" என்று எப்படி கேட்பார்?
. தமிழ்நாட்டை ஒரு வழி பண்ணிட்டுதுதான் போகப்போறாங்க இந்த பிலே ஸ்கூல் பாய்ஸ்
உலகிற்கே முன்னோடியான இந்த நல்ல திட்டத்தை வரவேற்கிறோம். ஒரு வேண்டுகோள். இந்த திட்டத்தை, உள்ளூர் பிரயாணத்திற்கு மட்டுமல்லாமல், வெளியூர் பயண பேருந்துகளிலும் அமல் படுத்த வேண்டும். உதாரணமாக சென்னை-கன்னியாகுமரி என்று தமிழ்நாட்டிற்குள் இயங்கும் பேருந்துகளிலும், சென்னை-பெங்களூரு, சென்னை-திருவனந்தபுரம், சென்னை-ஹைதெராபாத், சென்னை-அமராவதி போன்ற அண்டை மாநில பேருந்துகளிலும் அமல்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியவில்லையெனில், படிப்படியாக அமல் படுத்தலாம், உதாரணமாக, 2027ம் ஆண்டு முதல்வர் பிறந்த நாளன்று தமிழ்நாட்டிற்குள் இயங்கும் தொலை தூர பேருந்துகளிலும், 2028ம் ஆண்டு பிறந்த நாளன்று அண்டை மாநில பேருந்துகளிலும் அமல்படுத்தலாம். அதே போன்று 21 வயதிற்கு கீழ் உள்ள ஆண் மாணவர்களுக்கும் அமல் படுத்தலாம், 2029ம் ஆண்டு பிறந்த தினம் முதல். அதன் பின்னர், 60 வயதிற்கு மேற்பட்ட ஆடவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டிக்கலாம். 2031ம் ஆண்டு தேர்தலுக்கு முன் அனைத்து பாலினரும், அனைத்து வயதினரும், அனைத்து மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் பயன்பெறும் படி செய்யலாமே.
எனக்கு இது ஏதோ வஞ்ச புகழ்ச்சி போல் தோன்றுகிறது.
மக்கள் வரிப்பணத்தை வீண் செய்தால் ....... குடிநீர் மருத்துவம் கல்வி போன்ற அத்தியாவசியனவைகளுக்கு எங்கிருந்து பணம்வரும் ???
இலவசங்களின் நிலைபாட்டால் தான் இன்று எல்லாத்துறைகளிலும், இடங்களிலும் வடமாநிலத்தவர்களே நிரம்பிவருகின்றனர். ஒரு விதத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவர்களை அறியாமலே ஹிந்தி பயின்றுவருகிறார்கள் . வடமாநிலத்தவரிடம் வேலை வாங்க அவர்களுக்கு புரியும் விதத்தில் பேசவேண்டிய நிர்பந்தம் இந்த இலவசங்களினால் .
மகளிர் வெற்றிப்பயணம் திட்டம் குறித்த ஆலோசனைகே கூட்டத்தில் கூடிய யாருக்குமே சுயசிந்தனை இல்லாதது வருத்தமளிக்கிறது . எதற்க்காக இந்த இலவசப்பயணம் . யாருமே கேட்க்காதபோது கடனில் இருக்கும் அரசு இதை செயல்படுத்தலாமா ? மேலும் மேலும் கடன் சுமையை ஏற்றிக்கொண்டு இருந்தால் நாடு முன்னேறுமா ??
நீலகிரி மாவட்டத்தில் சாதாரண பேருந்துஉரிமத்தை பெற்றுவிட்டு எக்ஸ்பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி மக்களை சுரண்டும் அரசு போக்குவரத்து கழக பேருந்து களில் வெற்றி ப்பயணம் உண்டா??
இது வரை மகளிர் பயணம் பஸ் நிக்க கூட இடமில்லாம புல்லா வரும். அதனால காச கூட கொடுத்து அடுத்த டீலக்ஸ் பஸ்ஸில் ஏறி ஆண்கள் உட்கார்ந்து போனோம். இனி டீலக்ஸ் பஸ்லேயும் ஆண்கள் காசையும் கூட கொடுத்து நின்று கொண்டுதான் பயணம் செய்யனும் போல?
மிக சரியான கருத்து
ஆட்சியில் யார் வந்தாலும் அதிகார போதை வரும் என்பதற்கு விடியல் பயணம் - வெற்றி பயணமே சாட்சி . ரெண்டுபேருக்கும் பெரிதாக வித்தியாசமே இல்லை
அனைத்து இலவசம் என்றால் உழைக்க யாரும் முன் வர இல்லை. நாடு சூப்பர் தான், டில்லியில் கம்பெனிகள் ஆட்சி, இங்கே கோவிந்தா ஆட்சி. நீதி மன்றங்கள்,,, இந்த விசயத்தில்,கொள்கை முடிவு என்று கைவிட்டால் மக்கள் என்ன செய்ய முடியும்