உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்டர்சிட்டி போக்குவரத்தில் திடீர் மாற்றம்

இன்டர்சிட்டி போக்குவரத்தில் திடீர் மாற்றம்

சென்னை : கோவையில் இருந்து சென்னைக்கு, நாளை காலை 6:20 மணிக்கு புறப்பட உள்ள, 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில், காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் காட்பாடியில் இருந்து மதியம் 2:35க்கு புறப்பட்டு, கோவை செல்லும். நாளை காலை 5:00 மணிக்கு, மைசூரில் இருந்து சென்னை வரும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், காட்பாடியில் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், பிற்பகல் 3:30க்கு காட்பாடியில் இருந்து புறப்படும். வேலுாரில் இருந்து அரக்கோணத்துக்கு, நாளை காலை 10:00 மணிக்கு இயக்கப்பட உள்ள மெமு ரயில், சித்தேரியில் நிறுத்தப்படும். இந்த ரயில் மீண்டும் அங்கிருந்து, பிற்பகல் 3:02க்கு புறப்பட்டு வேலுார் செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை