உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் திடீர் மாற்றம்

 நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் திடீர் மாற்றம்

சென்னை: கரூர் உட்பட நான்கு மாவட்ட எஸ்.பி.,க்களை மாற்றம் செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட எஸ்.பி., ஜோஸ் தங்கையா மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி.,யாக ஹரிகிரண் பிரசாத் நியமிக்கப் பட்டுள்ளார். அதேபோல, ஈரோடு மாவட்ட எஸ்.பி., சுஜாதா மாற்றப்பட்டு கிரண் ஸ்ருதியும், நாகை மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு, சுஜித்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட எஸ்.பி., கண்ணன் மாற்றப்பட்டு, அம்மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.,யாக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தேர்தல் கமிஷன் செயலர் லதா திரிபாதி நேற்று பிறப்பித்துள்ளார். இம்மாவட்டங்களில் ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த எஸ்.பி.,க்களுக்கு, தேர்தல் பணி எதுவும் வழங்கப்படக் கூடாது என்றும் தேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை