உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வில் திடீர் சிக்கல்

10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வில் திடீர் சிக்கல்

மதுரை: ஊதியக் குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பணிக்காலம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில் அதிர்ச்சியில் உள்ளனர்.தமிழகத்தில் 1999 ஜனவரிக்கு பின் ரூ.2800 தர ஊதியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அடுத்தடுத்து அமல்படுத்திய ஊதியக் குழுக்களின் தவறான நிர்ணயத்தால், ஆண்டு தோறும் வழங்கப்படும் சம்பள உயர்வில் பாதிப்பு எதிரொலித்தது. இதனால் பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச ஆண்டுச் சம்பள உயர்வு(சீலிங்) 2024ல் முடிவுற்றது. இதனால் இந்தாண்டு முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2026 ஜனவரி முதல் ஆண்டு சம்பள உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆண்டுச் சம்பள உயர்வு என்பது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு இணையாக பெற்று வந்த சம்பளத்தை2006 முதல் தற்போது வரை 19 ஆண்டுகளாக இழந்து தவிக்கிறோம். இதை மீட்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.இந்நிலையில் 1999 ஜனவரியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆண்டுச் சம்பள உயர்வு கிடைப்பதிலும் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ள நிலையில் இந்த சிக்கல் இடி மேல் இடியாக விழுந்தது போல் உள்ளது. இதற்கான முரண்பாடுகளை களைய நிதித்துறைக்குத்தான் பொறுப்பு உள்ளது. ஆண்டுச் சம்பள உயர்வில் உச்சபட்ச சீலிங் பெற்ற ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் தற்போதுள்ள நிதித்துறை அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lakshminarayanan Piramuthu
மே 19, 2025 12:43

நீங்கள் என்ன படிச்சுருக்கீங்க சார். உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் இதே மாதிரிதானே....ஏன் சார் இப்படி டீச்சர்ஸ் பத்தி எழுதுறீங்க.நீங்கள் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் அரசு அல்லது தனியார் எதுவாயினும் இருந்து ஆசிரியர்களை கவனிக்கவும்... பின்னர் இங்கு வந்து கருது சொல்லவும்...


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 09:32

திமுக ஜெயிக்க வாக்கு சாவடியில் தீவிரமாக உழைப்பவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள். ஒரு ரிடையர்ட் அரசு பள்ளி தலைமையாசிரியர் கூறியது ஆசிரியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை என்றாலோ சரியான கற்பித்தல் திறன் இல்லாவிட்டாலோ அந்த ஆசிரியர் மீது ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு ஊதியத்தை குறைப்பது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த அதிகாரம் எதையும் எந்த தலைமையாசிரும் உபயோகிக்க கூடாது என்பது எழுதப்படாத சட்டம். ஆசிரியர்கள் காலையில் தலையில் மணக்க மணக்க பூ வைத்து கொண்டு வருவார்கள். பள்ளிக்கு வந்ததும் அந்த பூவை தலையிருந்து கழட்டி ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் போட்டு வைத்து விட்டு பள்ளி முடிந்து செல்லும் போது மீண்டும் பிரஷாக அந்த பூவை வைத்து கொண்டு செல்வார்களாம் மொபைல் போன் உபயோகம் ஆசிரியர்கள் அறையில் ஜாஸ்தி. எதுவும் கேட்க முடியாது. ஊர் நியாயம் உலக நியாயம் அதிகமாக பேசப்படும் ஆசிரியர்கள் அறையில். வகுப்பறைக்கு சென்று கடனே என்று பாடம் எடுக்கப்படும். அது தான் மாணவச் செல்வங்கள் மனம் நோகக்கூடாது என்று இலவச பாஸ் உள்ளதே. கவலை எதற்கு. எதற்கும் துணிந்து ஏதாவது ஏதாவது கேட்டால் இருக்கவே இருக்கிறது பிரம்மாஸ்திரம்.


VENKATASUBRAMANIAN
மே 19, 2025 08:02

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எப்போதும் திமுகவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அனுபவியுங்கள்.


மீனவ நண்பன்
மே 19, 2025 07:37

தமிழ்வாத்தியார்கள் தவிர மத்த வாத்தியாருங்க டியூசன் அல்லது ரியல் எஸ்டேட் சைடு பிசினஸ் வெச்சிருப்பாங்க


Palanisamy Sekar
மே 19, 2025 06:59

திமுகவுக்கு ஓட்டுப்போடுவதை பெருமையாக நினைத்த இவர்களுக்கு இதுக்கும் மேலேயும் படணும் துயரம்.


சமீபத்திய செய்தி