உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரத்தில் திடீர் மழை

விழுப்புரத்தில் திடீர் மழை

விழுப்புரம்,: விழுப்புரத்தில் பலத்த காற்றுடன் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரத்தில் நேற்று காலை 7:00 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஞாயிற்று கிழமை விடுமுறையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் கடும் சிரமத்தோடு வெளியே சென்று வந்தனர். இந்தநிலையில், இரவு 9:00 மணிக்கு திடீரென சில்லென காற்று பலமாக வீச துவங்கியது. இதையடுத்து, திடீரென மழை பரவலாக பெய்ய துவங்கியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்ததால், நகரில் பல இடங்களில் குளிர்ந்த சூழல் உருவாகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ