உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!

திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 27ல், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி, 76, என்பவர், தன் மகள் டாக்டர் நிகிதாவுடன் தரிசனம் செய்ய வந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில், கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், 29, 'வீல் சேர்' கொண்டு வந்து கொடுத்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t08k1ahs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, காரை பார்க்கிங் செய்யுமாறு சாவியை அஜித்குமாரிடம் நிகிதா கொடுத்துள்ளார். வழிபாடு முடிந்து சிவகாமியும், நிகிதாவும் காருக்கு திரும்பிய போது, கார் இருக்கையில் வைத்திருந்த பையில் 9.5 சவரன் நகையை காணவில்லை.இது குறித்து நிகிதா கேட்டதற்கு, அஜித்குமார் முறையான பதில் தராததால், திருப்புவனம் போலீசில் நகை திருட்டு குறித்து புகார் அளித்தார். போலீசார், அஜித்குமாரை கோவில் அருகே வைத்து விசாரித்தனர். விசாரணைக்கு பின், அஜித்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருப்புவனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக மதுரை திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆசிரியர் மற்றும் வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக கூறி நிகிதா பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தவர் டாக்டர் நிகிதா. இவரது புகாரின் பேரில் விசாரணையின் போது அஜித்குமார் அடித்து கொல்லப்பட்டார். அஜித்குமாரை குற்றம் சாட்டிய நிகிதா ஏற்கனவே பண மோசடி புகாரில் சிக்கியவர். நிகிதா, அவரது தாய் சிவகாமி குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது அம்பலம் ஆகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 02, 2025 23:35

நகையை பறிகொடுத்தவர் குற்றவாளி என்பதால் காவல்துறை அஜித்குமாரை கொலைசெய்தது நியாயம் என்று அறிவாலயம் தீர்ப்பு வழங்கப்போகிறது


Sekar
ஜூலை 03, 2025 20:58

எது எப்படியோ அநியாயமாக ஓர் உயிர்போய்விட்டது உயிர் மீண்டும் வருமா?. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பது மெய்


Ganesun Iyer
ஜூலை 02, 2025 22:52

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத முத்தமிழ் வித்தவரின் திராவிடிய வாரிசின் விடியா ஆட்சி..


Tetra
ஜூலை 02, 2025 21:48

காவல் துறையா? கையாலாகாத துறையா?


Naga Subramanian
ஜூலை 02, 2025 21:32

ஒட்டு மொத்த காவல் துறையையே வேறு மாநிலத்துக்கு அனுப்பிவிட்டு, வேற்று மாநில போலீசாரை இங்கு கொண்டு விட வேண்டும்.


N Annamalai
ஜூலை 02, 2025 21:00

நகை என்ன ஆயிற்று ?.கடைசி வரை புதிர் ?.


Prabakaran Prabakaran
ஜூலை 02, 2025 23:59

நகையை அந்த கேடு கெட்டவ கார்ல கொண்டு வரவில்லை. நாடகமாடிய நயவஞ்சகி, விசாரணையை விரைவில் முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்.


Ramesh Sargam
ஜூலை 02, 2025 20:48

அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தவர் டாக்டர் நிகிதா. இப்பொழுது அவர் மீதே ஒரு மோசடி வழங்கு இருப்பது தெரியவந்துள்ளது. காவலர்கள் என்ன செய்திருக்கவேண்டுமென்றால், புகார் கொடுத்தவர், புகார் யார் மீது கொடுக்கப் பட்டது என்று இரு தரப்பினரையும் முறையாக விசாரித்திருந்தால் அந்த இளைஞன் இன்று மரணம் அடைந்திருக்க வாய்ப்பில்லை.


தமிழ்வேள்
ஜூலை 02, 2025 20:38

இந்த டாக்டர் கருப்பான பெரியவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்றும் சென்னையிலிருந்து மாநில அரசின் உச்ச நிர்வாக அதிகாரியின் கார் ஓட்டுநர் கூட லோக்கல் போலீசுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஒரு தகவலும் ஓடுகிறது.சிபிஐ இந்த கோணத்திலும் நொங்கெடுத்தால் நல்லது.....


RAMESH
ஜூலை 02, 2025 20:07

இதிலும் ஒரு ஐஏஎஸ் சார் இருக்கிறார்....அவரையும் கூண்டில் ஏற்றுங்கள்


அண்ணாமலை ஜெயராமன்
ஜூலை 02, 2025 20:04

காரில் நகை இருந்தால் அதை பார்க் செய்ய தற்காலிக ஊழியரை ஏன் கேட்டுக்கொண்டார்கள். அது அவரின் வேலையும் இல்லை. அது 9 கிலோ அல்ல வெறும் 9 சவரன் எனும்போது அதை கையில் கொண்டு சென்று இருக்கலாம் அல்லது காரின் டெஷ்போர்டில் வைத்து அவர்களே காரை பார்க் செய்து இருக்கலாம்.


Varadarajan Nagarajan
ஜூலை 02, 2025 19:51

கடவுள் கண்திறந்துள்ளார். காளியம்மன் அவளது கருணையை காட்ட தொடங்கியுள்ளார்


சமீபத்திய செய்தி