உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதிய அளவில் ஆட்டோ எல்.பி.ஜி.,

போதிய அளவில் ஆட்டோ எல்.பி.ஜி.,

சென்னை: 'ஆட்டோ எல்.பி.ஜி., போதுமான அளவில் இருப்பு உள்ளது' என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல், டீசல் போதிய அளவில் கிடைக்கின்றன. தமிழகம் முழுதும், சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தை, எண்ணெய் நிறுவனங்கள், தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் பங்க்குகளில், ஆட்டோ எல்.பி.ஜி.,யும் போதுமான அளவில் இருப்பு உள்ளது. இந்த எல்.பி.ஜி., முறையாக கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதற்காக கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை