உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ கல்வி இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம்...

மருத்துவ கல்வி இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம்...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக, டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் சங்குமணி, ஜூன், 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கூடுதல் இயக்குநரான தேரணிராஜன், பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் கடந்தும், இயக்குநர் பதவி காலியாக இருந்த நிலையில், 'மருத்துவ கல்வி இயக்குநர் நியமனத்தில் நீடிக்கும் குழப்பம்' என்ற தலைப்பில், நம் நாளி தழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வராக இருந்த சுகந்தி ராஜகுமாரியை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக நியமித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளர். அதன்படி, டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவ கல்வி இயக்குநராக நேற்று பொறுப்பேற்றார். கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி ராஜகுமாரி, 36 ஆண்டுகளாக மருத்துவ கல்வி பணியில் உள்ளார். பல்வேறு அரசு மருத்துவ கல்லுாரிகளில், தோல் மருத்துவ துறையில் பேராசிரியர் மற்றும் துறை தலைவராக பணியாற்றிய அவர், 2019ல் பதவி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மருத்துவ கல்லுாரி முதல்வரானார். பின், மருத்துவ கல்வி இயக்கக கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றிய அவர், தற்போது மருத்துவ கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி