உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம்; செந்தில் பாலாஜி

கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம்; செந்தில் பாலாஜி

சென்னை: கோடை காலங்களில் எந்த வித தடையும் இல்லாமல் தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவது துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கோடை காலத்தில் 22,000 மெகாவாட் அளவுக்கு மின்தேவை இருக்கும். கடந்த ஆண்டு, 20 ஆயிரம் மெகாவாட் மின்தேவை இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில், ஏப்ரல், மே மாதத்திற்கு தேவையான மின்சாரத்தை வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் மூலமாக கொள்முதல் செய்யும் பணிகள் நிறைவு பெற்று விட்டது. வரக்கூடிய கோடை காலங்களில் எந்த வித தடையும் இல்லாமல் தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. 393 துணை மின்நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, 250 துணை நிலையங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, திட்டமதிப்பிட்டு தயார் செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள துணை மின்நிலையங்களுக்கு தேவையான இடங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களில் முக்கிய இடங்களை மட்டும் நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றில் ஒரு பங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன. 6000 மெகாவாட் அளவுக்கு கோடை காலத்தில் கூடுதலாக தேவை என்று கணக்கிடப்பட்டு, அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு ரூ.8 முதல் ரூ.9க்குள் பெற இறுதி செய்யப்பட்டுள்ளது. சோலார் பூங்கா அமைக்க இடங்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. 2,300 ஏக்கர் நிலங்கள் மின்வாரியத்திற்கு கலெக்டர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. திட்டங்களை ஒரே நேரத்தில் செயல்படுத்த நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. 7,000 மெகாவாட் தெர்மல் என்கிறதை 2030க்குள் பணிகளை முடிக்கப்பட்டு, அதற்கான உற்பத்தியை தொடங்கப் போகிறோம், இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Oviya vijay
மார் 26, 2025 20:04

நாம் இருப்பது 2025 இல். 30% மக்கள் சோலார் மின்சாரம் உபயோகின்றனர். என்னமோ பெரிய சாதனை போல தேற்றம். மாடல் அருமை


Ramesh Sargam
மார் 26, 2025 19:55

கோடைகாலம், மழைக்காலம் எந்தகாலமாக இருந்தாலும், தமிழகத்தில் டாஸ்மாக் சரக்கு எந்தவித தடையில்லாமல் கிடைக்கும். நன்றி திமுக அரசுக்கு.


Ramesh Sargam
மார் 26, 2025 19:04

வெறும் வாய் சவடால்தான். உண்மை நிலை வேறு. இவர்கள் வாயில்தான் தடையில்லாமல் பொய் பேச வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை