உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நல்ல திட்டங்களுக்கு ஆதரவு: பா.ஜ., உறுதி

 நல்ல திட்டங்களுக்கு ஆதரவு: பா.ஜ., உறுதி

சென்னை:பா.ஜ., -- எம்.எல்.ஏ., போஜராஜன் பேசியதாவது: அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தில், பலர் துரதிருஷ்டவசமாக ஏதேதோ பேசியுள்ளனர். பா.ஜ.,விற்கு எதிரான பிரசார கூட்டமாக, மாண்பை மீறி பேசி விட்டனர் என நினைக்கிறேன். இந்த சபையின் மரபை கருதி, அந்த கருத்துக்களை எல்லாம் நேரமும், காலமும் வரும்போது, நானும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். ஒற்றை தாமரை மட்டுமே இருக்கிறது என்று, ஒருவர் சொன்னார். கடந்த காலத்தை நினைத்து பார்க்க வேண்டும். இரண்டு எம்.பி.,க்கள் மட்டுமே பா.ஜ.,விற்கு இருந்தனர். இன்றைக்கு நாட்டை மட்டுமல்ல, பல மாநிலங்களை ஆளும் கட்சியாக பா.ஜ., உள்ளது. பா.ஜ., இங்கு கால் ஊன்றாது என்றும் சொல்கின்றனர்; பரவாயில்லை. அதை தமிழக மக்கள் பார்த்துக் கொள்வர். தமிழகத்தின் மீது பிரதமர் மோடி அக்கறையுடன் உள்ளார். தமிழக அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார். அதனால், நம்பிக்கை தீர்மானத்தில் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை