உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகன் விடுவிப்பு ரத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை

துரைமுருகன் விடுவிப்பு ரத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை

சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர் துரைமுருகன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த, 2006 - 11 வரையிலான தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011ல் வழக்கு பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த வேலுார் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் கடந்த 2017ல் விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேலுார் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் துரைமுருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

joe
செப் 25, 2025 13:30

ஒரு சோம்பேறி அரசியல்வாதி. தி மு க என்பதே ஊழல்வாதிகள் கூட்டமே .அதில் இவரும் ஒரு ஊழல்வாதியே .


Thravisham
செப் 24, 2025 04:28

கொலிஜிய நீதி இப்படித்தான் இருக்கும்


A P
செப் 23, 2025 22:01

இந்த தலைப்பை இப்படி பிரித்துப் பிரித்துப் படிக்கணும். துரைமுருகன் விடுவிப்பு விடுவிப்பு ரத்து அதாவது கைது விடுவிப்பு ரத்துக்கு அதாவது கைதுக்குத் தடை அதாவது பகல் கொள்ளை அடித்த இந்த கொள்ளைக்காரரை கைது செய்யக்கூடாது. ரொம்ப நல்லா இருக்கு


VENKATASUBRAMANIAN
செப் 23, 2025 18:52

ஒன்றுமே புரியவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது. நீதிமன்றங்கள் செயல்படுகிறதா. கொள்ளை அடித்தவர்களுக்கு ஆதரவாக உள்ளதா. சமீபத்திய நடவடிக்கைகள் சந்தேகப்பட வைக்கிறது.


spr
செப் 23, 2025 18:01

"சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்ததோடு,..............தண்டனை கொடுத்தாலும், அதனை காலம் குறிப்பிடாமல் நிறுத்தியும் வைப்பார்கள்" "ஒண்ணுமே புரியலே உலகத்திலே. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது" - சட்டம் புரியாமல் தீர்ப்பு வழங்கும் நீதிபதியா தமிழகத்துக்கு? நம் முதல்வர் இதனை எதிர்த்துப் போராட வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு தவறானவையா? அப்படியானால், அவர்களுக்கு தண்டனை இல்லையா? நடக்கும் விசாரணையை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்?


Balamurugan
செப் 23, 2025 17:30

நீதிமன்றங்கள் நீதிபதிகள் வேஸ்ட்.


Vasan
செப் 23, 2025 15:43

விடுவிப்பு ரத்துக்கு விடுக்கப்பட்ட தடைக்கு எப்போது ரத்து விடுக்கப்படும் ?


Perumal Pillai
செப் 23, 2025 11:59

வியாபார ஸ்தலம் மற்றும் பொது ஏல கூடம் . கையில் காசு வாயில் தோசை .


Perumal Pillai
செப் 23, 2025 11:56

குற்றவாளிகளின் சொர்க்க லோகம் மற்றும் புண்ணிய பூமி இந்த சுப்ரீம் கோர்ட் .


Anand
செப் 23, 2025 10:35

உச்சநீதிமன்றம் இருக்கும் வரை இவனை போன்ற கேடுகெட்டவர்களுக்கு கொண்டாட்டம் தான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை