சுப்ரீம் கோர்ட் - கடந்த வாரம்
செப்., 2: தமிழக அரசு சார்பில், இலவசத் திட்டங்கள் வழங்குவதை எதிர்த்து, வழக்கறிஞர் சுப்ரமணிய பாலாஜி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,'தமிழக அரசின் இலவசத் திட்டங்களை நிறுத்த முடியாது என்றும், இவை, மக்கள் நலனுக்கானவை' எனவும், தமது தீர்ப்பில் கூறினர்.செப்., 2: பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, கடந்த மாதம் 16ம் தேதி காந்தியவாதி அன்னா ஹசாரே, ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து,சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வலியுறுத்துவது சரியான நடவடிக்கை அல்ல' என தீர்ப்பளித்தனர்.