உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் திருத்த பணி சுப்ரீம் கோர்ட் பரிந்துரை சரியே!

வாக்காளர் பட்டியல் திருத்த பணி சுப்ரீம் கோர்ட் பரிந்துரை சரியே!

பீஹார் மாநிலத்தில் தற்போது, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தலைமை தேர்தல் ஆணையம் திடீரென மேற்கொண்டு வருகிறது. பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில், அண்டை நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் அதிகளவில் இடம் பெற்றிருப்பதாக, தேர்தல் ஆணையம் நம்புவதே இதற்கு காரணம். ஏற்கனவே, '2003ல் பீஹாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடந்தது. அதன்பின், 10 தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. அப்படிப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நேரத்தில், அவசரமாக இதைச் செய்ய வேண்டிய தேவை என்ன? மேலும், ஆதார் அட்டை போன்றவற்றை அடையாள ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என, தேர்தல் ஆணையம் மறுத்தது, தன்னிச்சையான செயல்பாடு. 'எனவே, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தடை விதிக்க வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள, அரசியல் சட்டப்படி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும், பீஹாரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?'மேலும், ஒருவரின் குடியுரிமை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். அதற்கான அதிகாரம், அந்த அமைச்சகத்திற்கு மட்டுமே உள்ளது எனும்போது, அதுபற்றி தேர்தல் ஆணையம் எப்படி கேள்வி எழுப்ப முடியும்' என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தலைமை தேர்தல் ஆணையம் பீஹாரில் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.அதே நேரத்தில், 'உண்மையான வாக்காளர்கள் எவரும், பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி உள்ள வாக்காளர்களுக்கு அவர்களின் உரிமை நிலைநாட்டப்படும்' என, தேர்தல் ஆணையம் முன்வைத்த வாதத்தையும், உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.'தற்போதைய சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, 2003-ம் ஆண்டுக்கு பின் வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள், இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்தது, பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பல வாக்காளர்களால் இந்த ஆவணங்களை பெறுவது சிரமம் என, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனால், லட்சக்கணக்கானோர் ஓட்டுரிமை அற்றவர்களாக மாறுவர் என்றும் கவலை தெரிவித்துள்ளன.இருப்பினும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை ஏன் சான்றாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் சரியான பதில் இல்லை. எனவே, அந்த மூன்றையும் சரிபார்ப்பு ஆவணங்களாக தேர்தல் ஆணையம் கருத வேண்டும் என, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது சரியானதே.வாக்காளர் பட்டியலை புதுப்பித்து, துல்லியமானதாக குறைபாடு இல்லாததாக மாற்ற, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றாலும், ஆவணமற்ற மக்கள், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பின்தங்கிய ஜாதியினர் போன்றோர், ஆணையம் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு சிரமம் தராமல், அவர்களுக்கு கவலையை உண்டாக்காமல், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை மேற்கொள்ள வேண்டும். அதுவே, சரியானதாகும்.அடுத்ததாக, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள உள்ள தேர்தல் ஆணையம், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Iyer
ஆக 10, 2025 21:58

ரொஹிங்கியாக்களும் - பங்களாதேஷிகளும் வெறி பிடித்த கொலைகாரர்கள். ரொஹிங்கியாக்கள் - பல லக்ஷம் புத்த மதத்தினரை புரமாவில் ஈவு இரக்கம் இன்றி கொன்றனர் பங்களாதேஷிகள் கோடிக்கணக்கில் ஹிந்துக்களை கொன்றுவருகின்றனர் இவர்களை நம்நாட்டில் புகலிடம் கொடுப்பது தற்கில்லைக்கு சமமாம்


Iyer
ஆக 10, 2025 21:48

கள்ளக்குடியேரிகளால் நிலைமை பேராபத்து ஆகிவுள்ளது. 9 கோடி பங்களாதேஷிகளும் + ரொஹிங்கியாக்களும் இன்று பாரதத்தில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது. எல்லா பாரதவாசிகளும் ஒன்றிணைந்து 9 கோடி பேரை நாடு கடத்த மோதி அரசுக்கு கைகொடுக்கவேண்டும்


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 14, 2025 19:03

சுப்ரிம் கோர்ட் பணி சரி தான்


Suppan
ஜூலை 14, 2025 12:59

"ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை ஏன் சான்றாகப் பயன்படுத்தக் கூடாது..." இந்த மூன்று ஆவணங்களையும் எதிர்க்கட்சிகள் தங்களுடைய செல்லப்பிள்ளைகளான திருட்டுக்குடியேறிகளுக்கு வாங்கிக்கொடுப்பதுண்டு. இவைகளை எப்படி சான்றாக எடுத்துக்கொள்ளமுடியும் ?


R.P.Anand
ஜூலை 14, 2025 10:23

பீகார் ல காப்பி அடிச்சி செர்டிபிகேட் டு கூட கொடுபானுங்க அதார் அட்டை குடுக்க மாட்டானுங்களா. அங்கேயும் ஊழல் ஆட்சி தான் பன்னானுங்க.


GMM
ஜூலை 14, 2025 09:50

சான்று என்பது உண்மை ஆவணங்களில் இருந்து எடுத்து பெயர் போன்றவை எடுத்து வழங்குவது. பள்ளி சேர்க்கை பதிவேடு எண்ணில் பிறப்பு தேதி இருக்கும். ஆதார், போன்றவை சான்று அல்ல. அடையாளம் அட்டை. இந்திய குடிமகன் என்ற தனி சான்று இல்லாவிட்டாலும், ஓட்டு போட இந்திய குடிமகன் என்பதற்கு பிறந்த தேதி போன்ற அரசு நிர்வாக சான்று தேவை.


பேசும் தமிழன்
ஜூலை 14, 2025 09:11

ஆதார் அட்டை வாங்கி வைத்து இருக்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்களுக்கு ஓட்டு போட அனுமதி கொடுக்க முடியுமா ??


R.RAMACHANDRAN
ஜூலை 14, 2025 08:52

புலம் பெயர்ந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் கஞ்சி என்ற நிலையில் இருக்கும் ஏழைகள் எல்லாம் வீட்டில் இல்லை என நீக்கி விட்டால் வெற்றி பெற்று விடலாம் என நேரம் இல்லாத/நேரம் தவறிய நேரத்தில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியை மேற்கொள்ள செய்துள்ளனர். 2500 கட்சிகள் இருப்பதால் ஜன நாயகத்தை பேணி காப்பதாக வெளி நாடுகளில் பெருமை தெடிக் கொண்டு உள்நாட்டில் அவைகளை ஒடுக்கும் வேலையை செய்கின்றனர்.


Marai Nayagan
ஜூலை 14, 2025 14:27

திருட்டு திராவிடம், மமதை, லல்லு எல்லாம் 21 ஆம் பக்க கட்சிகன் ...நாட்டை விற்று ஓட்டை வாங்கி கொள்ளை அடிப்பதை தடுக்க வாக்காளர் அடையாள அட்டை சரி பார்ப்பு அவசியம்


Subramanian
ஜூலை 14, 2025 06:08

The very same opposition parties argued against use of Adhaar few years before and SC accepted their arguments. Now the same SC is accepting their view. Is the SC there to only say yes to opposition parties?


சமீபத்திய செய்தி